நண்பர்களே... நலமா? வெகுநாட்களாக திரைப்படங்களுக்கென தனியே தளம் துவங்கவேண்டும் என்று ஆவல் இருந்து வந்தது. ஏற்கனவே நிறைய நண்பர்கள் திரைப்பட விமர்சன தளங்களை நடத்திவருகையில் நானும் அநாவசியமாகத் துவங்கவேண்டுமோ என்று யோசித்துக் கொண்டேயிருந்தேன். பார்வைகள் ஒவ்வொருவருக்கும் வேறுபட்டது. எனக்கு நேர்மறையான விஷயம் மற்றொருவருக்கு எதிர்மறையாகத் தெரியலாம். கோணங்கள் மாறுபடலாம். கருத்து வேறுபாடுகளும் அவ்வாறே. ஆகவேதான் துணிந்து இறங்கி தளத்தைத் தொடங்கியும் இருக்கிறேன்.
சினிமா என்பது வெகு பலருக்கு தத்தம் கனவுகளின் திரைத் தோற்றமாகவே இருக்கிறது. ஆனால் அதை எத்தனை பேர் கலையாக ஒரு கவிதையாக உணர்கிறார்கள் என்பது தெரியாது. என்னைப் பொருத்தவரையில் எனக்குத் திருப்தியான மனதினுள் கவிதைகளைப் பரப்பிய படங்களையே நான் விமர்சிக்கப்போகிறேன். வித்தியாசமாகவோ அல்லது சப்பையாகவோ இருந்தாலும் நீங்கள் ஏற்று படித்து ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்


ஆதவா.!!

Related Posts Plugin for WordPress, Blogger...
Subscribe