189532.1020.A

Direction Rob Marshall

Starring   

Renée Zellweger, Catherine Zeta-Jones, Richard Gere, Queen Latifah, John C. Reilly, Christine Baranski, Taye Diggs, Lucy Liu

Music    

John Kander (music)
Fred Ebb (lyrics)
Danny Elfman (score)

Cinematography   Dion Beebe
Editing Martin Walsh
Year 2002
Language    English
Genre Musical, Drama


Warning : கடுமையான மொழி, கவர்ச்சியான உடை - குழந்தைகள் பார்ப்பதற்கு ஏற்ற படமல்ல.

ஆங்கிலப்படங்கள் பலவற்றை நன்கு கவனித்தால் படங்களில் கதை ஒன்றும் பெரிதாக இருக்காது, ஆனால் அவர்களின் திரைக்கதை பாணி வியப்பில் ஆழ்த்துவதாக இருக்கும். திரைக்கதையை எவ்வளவு ஆழமாக அமைக்கிறார்களோ அழுத்தமில்லாத கதையாக இருந்தாலும் அவ்வளவு நன்றாக திரைப்படம் அமைந்துவிடும். சிகாகோவிலும் அப்படித்தான் நடந்திருக்கிறது.

24011_galவெல்மா கெல்லி (Velma Kelly) ஒரு மேடை நடன பாடகி, (Stage showgirl) அவளைப் போலவே தானும் ஒரு மேடைநடன பாடகியாகவேண்டும் என்பது ராக்ஸி ஹார்ட்டின் (Roxie Hart) விருப்பம். இதற்காக வெல்மாவுடன் ஆடும் ஃப்ரட்ஐ (Fred) கள்ளத்தொடர்பு கொண்டு விருப்பத்தை நிறைவேற்ற முயல்கிறாள். ஆனால் ஃப்ரட் தனக்கும் மேடைநடனத்திற்கும் தொடர்பில்லை என்று கூறிவிட, ராக்ஸி அவனை துப்பாக்கியால் சுட்டுவிடுகிறாள். இதேநேரத்தில் வெல்மா, தனது கணவனையும் அவனோடு படுத்திருக்கும் தன் சகோதரியையும் சுட்டுவிடுகிறாள். இருவரும் பெண்களுக்கான சிறையில் அடைத்துவைக்கப்படுகிறார்கள்.  அங்கே மமா (Mama) என்றழைக்கப்படும் மமா மார்டனின் (Mama Morton) கீழ் கண்காணிக்கப்படுகிறார்கள். மமாவின் உதவியால் ராக்ஸி சிகாகோவில் சிறந்த வழக்கறிஞரான பில்லி ஃபிலினின் (Billy Flynn) உதவியை நாடுகிறாள்.  2002_chicago_008

பில்லி ஏற்கனவே வெல்மாவின் லாயரும் கூட. இருவரும் இணைந்து கொலை நடந்த நிகழ்வை மாற்றி அமைக்கிறார்கள்.   தனது  மற்றும்   தன்  வயிற்றில் வளரும் குழந்தையின் பாதுகாப்பிற்காகத்தான் சுடவேண்டி வந்தது என்று வழக்கை திசைதிருப்ப சிறையிலேயே ஒத்திகையும் பார்த்துவிடுகிறார்கள். பில்லி ஃப்லினின் லிஸ்டில் முதலிடத்தில் ராக்ஸி இருப்பதால் அவ்விடத்தைப் பிடிக்க வெல்மாவும் முயல்கிறாள்.

பத்திரிக்கையாளர்களிடையே பரப்பரப்பான செய்தியாகவும் பிரபலமாகவும் விளங்கும் ராக்ஸி பில்லியின் உதவியால் சிறையிலிருந்து வெளியே வந்தாளா? வெல்மாவுக்கும் ராக்ஸிக்குமிடையிலிருந்த உறவு என்னாயிற்று ராக்ஸி தனது விருப்பப்படி மேடைநடனப் பாடகியானாளா போன்றவை இறுதியில்… 8584_gal

ஒரு சின்னக் கதையை மிக அழகான பாடல்களின் மூலம் அழகாகக் கொண்டு செல்ல முடியும் என்று நிரூபித்திருக்கிறார் இயக்குனர் Rob Marshall. ஒன்றரை மணிநேரப் படத்தில் ஒருமணிநேரம் பாடல்களாகவே செல்கிறது. பெரும்பாலும் Jazz இசைப் பாடல்கள். திரைக்கதையை பாடல்களோடு நகர்த்தியிருப்பது சிறப்பானது. நமது பழங்காலப் படங்களில் பாடப்படும் பாடல்கள் கதையை நகர்த்தி செல்வதற்காகப் பாடப்படுவதில்லை. இன்றும் கூட பல படங்களில் பாடல்கள் தேவையற்றே காணப்படுகின்றன. எல்லா பாடல்களையும் நடித்திருப்பவர்களே பாடியிருக்கிறார்கள்.

வெல்மா கெல்லியாக நடித்து ஆஸ்கர் துணைநடிகை  விருது பெற்ற Catherine Zeta Jones ன் And All that Jazz எனும் Jazz  பாடல் மூலமாகத் தொடங்குகிறது திரைப்படம். ராக்ஸியின் (Renée Zellweger)கணவனிடம் விசாரணை நடத்தும் பொழுதும், மமாவாக நடித்திருக்கும் Queen Latifahவின் அறிமுகத்தின் போதும் பில்லியின் அறிமுகம், விசாரணை, கோர்ட் வெல்மா, ராக்ஸியிடம் பேசுவது என ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் பாடல்களே, குறிப்பாக, செல்மேட்கள் தனது குற்றத்தைப் பற்றிச் சொல்லும் Cell Block Tango மற்றும் மமாவின் When You're Good to Mama ஆகியவை எனக்கு மிகவும் பிடித்தவை, We Both Reached for the Gun எனும் பாடலின் பொம்மலாட்ட நடனம் குறிப்பிடத்தக்கது.  25881_galபில்லியாக நடித்திருக்கும்  Richard Gere கோர்ட்டில் பேசும் விவாதங்களையும் பாடல்களாகவே கொண்டு சென்றிருக்கிறார்கள். ராக்ஸியின் செல்மேட்டின் தூக்கு தண்டனை கூட ஒரு மேடைப் பாடல்காட்சியாகவே இருக்கிறது.

படத்தின் பாடல்களைப் போலவே ஒளிப்பதிவு குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் இரவை மையப்படுத்தியே எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகள், லைட்டிங் ஆகியவை அபாரம். ராக்ஸி பாடலின் பொழுது அமைக்கப்பட்டிருக்கும் ஒளி, பின்புலம் ஆகியவற்றிலிருந்து பல விஷயங்கள் தமிழ்சினிமா கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். 

சிறந்த படம் உள்ளிட்ட ஆறு ஆஸ்கர் விருதுகளையும் மூன்று கோல்டன் க்ளோப் மற்றும் கிராமி விருதுகளையும் இப்படம் வென்றிருக்கிறது. இசை மற்றும் நடனம் ஆகியவற்றின் விரும்பிகள் நிச்சயம் பார்க்கவேண்டிய படம். அதன் சிறந்த நடன அமைப்பு, ஒளி மற்றும் பாடல்களுக்காகவே….


Trailer

Natalie-Portman-in-Black-Swan-2

Direction Darren Aronofsky
Screenplay Mark Heyman
Starring   Natalie Portman, Vincent Cassel, Mila Kunis
Music Clint Mansell
Cinematography Matthew Libatique
Year  2010
Language   English
Genre Psychological thriller

Warning :
காமம், குழந்தைகள் பார்க்கக்கூடாத காட்சிகள், மற்றும் கேட்கக்கூடாத வார்த்தைகள்

பிரபல பாலே (Ballet) நடனத்தில் ஸ்வான் லேக் எனும் கதையுடன் கூடிய நடனம் அரங்கேற்றப்படுவதுண்டு. வெள்ளை அன்னமாக, ஒரு மந்திரவாதியிடம் சாபம் பெற்ற இளவரசியைக் காதலிக்கும் இளவரசன் தவறுதலாக மந்திரவாதியின் சூழ்ச்சியால் கருப்பு அன்னத்தால் கவர்ந்திழுக்கப்பட, வெள்ளை அன்ன இளவரசி விஷயமறிந்து தற்கொலை செய்து கொள்வதாக முடியும் அக்கதை. இதனை மையமாகவைத்து எடுக்கப்பட்ட உளவியல் திகில் திரைப்படம் Black Swan. மனதினுள் எழும் அகவெளிப்பாடுகளை புறவெளிப்பாட்டுக் காட்சியகங்களாகப்படுத்தி எடுத்திருப்பது வியப்பையும் ஆச்சரியத்தையும் தருகிறது.

o-darren-aronofsky-s-black-swan-opens-on-december-1நினா (Nina) ஒரு பாலே நடனக்கலை பயிலும் மாணவி. ஸ்வான்லேக் (Swan Lake) எனப்படும் பாலே நடனத்தின் உயரிய அரங்கேற்றத்தில் இளவரசி பாத்திரத்தில் நடனமாடவேண்டும் என்பது அவரது லட்சியம். ஆனால் நினா ஒரு மிக மிதமான பெண். ஸ்வான்லேக் நடனத்தின் இரண்டாம் பகுதியில் Black Swan ஆக நடனமாட ஆக்ரோஷமும், வெறியும், மிதசுபாவத்தன்மையற்ற பெண் அன்னமாகவும் இருக்க வேண்டும். முன்பு கருப்பு அன்னமாகத் திகழ்ந்த பெத் (Beth) ஐ கழற்றிவிட்டு விட்டு புதியதாக ஒருவரை நியமிக்க முடிவெடுக்கிறார் பாலேநடன இயக்குனரான தாமஸ் (Thomas) வெள்ளை அன்னத்திற்கு மிகப்பொருத்தமாக இருக்கும் நினாவை ஒரு சின்ன நிகழ்வுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கும் தாமஸ், கருப்பு அன்னத்திற்காக நினாவின் மிதமான போக்கை மாற்ற முயலுகிறார். இதனிடையே ஒருசில மாற்றங்கள் நினாவின் உடலில் நிகழுகிறது. தந்திரமான காட்சிகள், உடல் காயம் போன்றவை அவ்வப்போது ஏற்பட்டுவிடுகிறது. நினாவுக்கு மாற்றாக லிலியை (Lily) தாமஸ் நியமிக்கிறார். லிலி கருப்பு அன்ன பாத்திரத்திற்கு சரியாக இருப்பதாக காட்டப்படுகிறது. தனது இடத்தை அடைய லிலி முயலுவதாக எண்ணும் நினா, லிலியிடம் பொறாமையும் கோபமும் கொள்கிறார்.

இறுதியில் யார் கருப்பு வெள்ளை அன்னமாக  நடனமாடினார்கள், லிலிக்கும் நினாவுக்கு இறுதியில் என்னவாயிற்று? அவளுக்கு உடலில் ஏற்பட்டவைகள் என்னென்ன என்பது பரபரப்பான திகில் நிறைந்த இறுதிக் காட்சிகளில்……..

உளவியல் ரீதியான திகில் திரைப்படங்கள் நிறைய mgv2umaiபார்த்திருந்தாலும் Black Swan ல் மிகவித்தியாசமான கதையமைப்பு நம்மைக் கவர்கிறது. நினாவாக நடித்திருக்கும் நடாலி போர்ட்மனின் (Natalie Portman) நடிப்பு மிக அபாரமானது. குறிப்பாக White Swan என்று சொல்லப்படும் மிதமான முகபாவம் கொண்ட (இளவரசி) நடனத்திற்கு மிகக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். ஸ்வானாக தேர்ந்தெடுக்காத பொழுது தனக்கு வாய்ப்பு போய்விட்டதே என்று அழும் நடாலி, பின் வாய்ப்பு கிடைத்துவிட்டதை எண்ணி சிரித்துக் கொண்டே அதேசமயம் சிரிப்பை மழுப்பிக் கொண்டே அம்மாவிடம் பேசும் காட்சி சிறப்பான நடிப்பின் வெளிப்பாடு. தன் உடலில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றித் தெரியாமல், வெளியே சொல்ல முடியாமல் தவிப்பதும், காம இச்சை பழகுமிடத்தில் பயம், சந்தோஷம், கோபம், ஆகிய உணர்வுகளை அழகாகக் காட்டுவதும் சிறப்பு. நடாலியின் கேரியரில் மிகச்சிறந்த நடிப்பு இப்படத்திலுண்டு. 71638_galலிலியாக Mila Kunis, இவரும் நடாலியும் ஆறுமாதங்கள் பாலே நடனம் கற்று பின்னர் படத்தில் இறங்கியிருப்பது இப்படத்தின் கடும் உழைப்புக்குச் சான்று. நடாலிக்கு எதிரியாகவே வரும் மிலா குனிஸ், நடாலியின் கண்களில் ஒரு தாசியைப் போன்றே வலம்வருவதும், இருவருக்குமான போராட்டத்தைக் காண்பிப்பதும் உளவியல் ரீதியான காட்சிகள்!

ஒரு மிதமான, காமம் பற்றி தெரியாத சுபாவம் கொண்ட, அமெச்சூர் பெண்ணாகவே இருக்கும் நினா, மெல்ல மெல்ல மெச்சூர் ஆவதை, புறவெளிப்பாடுகளின் மூலம் காண்பித்திருப்பது வித்தியாசமான திரைக்கதை. நினாவுக்கு பின்முதுகில் காயம் ஏற்படுவது, கால்கள் அன்னத்தைப் போல ஒட்டிக் கொள்வது, கைகளில் இறக்கை முளைப்பது, கண்ணாடிகளில் நினாவின் உளமாற்றத்தைக் காண்பிப்பது போன்றவை அவளது அகத்தின் புறவெளிப்பாடுகளே.. பார்வையாளர்கள் இந்த மாற்றத்தைப் புரிந்து கொள்ளாமல் பார்த்தால் சந்தேகங்களும் குழப்பங்களும் மிஞ்சும்.

முழுக்க  முழுக்க பாலே நடனமும் பாலே ஆர்கெஸ்ட்ரல் இசையுமாகவே செல்லும் இப்படத்தினை துளிகூட சலிப்பே இல்லாமல் திகில் படமாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் Darren Aronofsky. அடுத்தது என்ன என்று சீட்டின் நுனியில் அமரவைத்துவிடும் காட்சியமைப்புகள் பிரம்மிப்பூட்டுகின்றன. மிகச்சாதாரண கதைக்கு அசாதாரண திரைக்கதையமைத்து காட்சியகப்படுத்தியிருப்பது வியப்பில் ஆழ்த்துகிறது.  black-swan-film-affiche-poster-04
(புற)உளவியல் மாற்றங்களின் வித்தியாசமான காட்சிப்படுத்தலுக்காகவே பார்க்கவேண்டிய படம்.

Trailer :

hero719_83noms_nolist

 

ஆஸ்கர் ஃபீவர் ஆரம்பமாகிவிட்டது. எதிர்பார்த்தபடி பல படங்கள் கடுமையான போட்டிக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சென்றமுறை போலவே இம்முறையும் பின்னணி இசை மற்றும் பாடலுக்கான ஆஸ்கர் விருது பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. 81வது ஆஸ்கரை இந்தியர்கள் எவரும் மறந்திருக்க மாட்டார்கள். இசைக்கு இரண்டும், ஒலிக்கு ஒன்றுமாய் மூன்று விருதுகள் முதல்முறையாகப் பெற்றது வரலாற்று சாதனை. இம்முறையும் ரஹ்மான் இரண்டு விருதுகளையும் வெல்ல வாழ்த்துகிறேன்.

ஆஸ்கர் பரிந்துரை பட்டியல்கள் :

Actor in a Leading Role


Javier Bardem in “Biutiful”
Jeff Bridges in “True Grit”
Jesse Eisenberg in “The Social Network”
Colin Firth in “The King's Speech”
James Franco in “127 Hours”

கோல்டன் க்ளோப் பெற்ற Colin Firth இதிலும் பெற வாய்ப்பு அதிகம். 127 ஹவர்ஸின் ஃப்ராங்கோவுக்கும் வாய்ப்பு இருக்கிறது.

Actor in a Supporting Role


Christian Bale in “The Fighter”
John Hawkes in “Winter's Bone”
Jeremy Renner in “The Town”
Mark Ruffalo in “The Kids Are All Right”
Geoffrey Rush in “The King's Speech”

Christian Bale கோல்டன் க்ளோப் பெற்றிருக்கிறார். மற்றவர்கள் குறித்து கணிக்கமுடியவில்லை.

Actress in a Leading Role

Annette Bening in “The Kids Are All Right”
Nicole Kidman in “Rabbit Hole”
Jennifer Lawrence in “Winter's Bone”
Natalie Portman in “Black Swan”
Michelle Williams in “Blue Valentine”

Natalie Portman மற்றும் Annette Bening  இரண்டுபேரும் கோல்டன் க்ளோப் பெற்றிருக்கிறார்கள். நடலி போர்ட்மன் நடிப்பு அபாரமாக இருந்தது. மற்றவர்கள் குறித்து கணிக்கமுடியவில்லை.

Actress in a Supporting Role


Amy Adams in “The Fighter”
Helena Bonham Carter in “The King's Speech”
Melissa Leo in “The Fighter”
Hailee Steinfeld in “True Grit”
Jacki Weaver in “Animal Kingdom”

Melissa Leo கோல்டன் க்ளோப் பெற்றிருக்கிறார். இதில் The King's Speech தவிர மற்ற படங்களைப் பார்த்ததில்லையென்பதால் யார் யார் என்ன விருது பெறுவார்கள் என்று கணிப்பது கடினம்.

Animated Feature Film

“How to Train Your Dragon” Chris Sanders and Dean DeBlois
“The Illusionist” Sylvain Chomet
“Toy Story 3” Lee Unkrich

சந்தேகமே வேண்டாம்…  டாய் ஸ்டோரிதான். வருடம் ஒரு சிறந்த படம் வெளியிடும் இவர்களை மீறி How to Train Your Dragon உம் The Illusionist உம் பெறுவது மிக மிக கடினம். இந்த மூன்று படங்களில் என்னைப் பொறுத்தவரையிலும் பெஸ்ட் அண்ட் பெஸ்ட் ஆஃப் த பெஸ்ட் டாய் ஸ்டோரி 3 மட்டுமே!!  ஆனால் கோல்டன் க்ளோபில் இவற்றோடு போட்டியிட்ட Despicable Me மற்றும் Tangled ஆகியவை பரிந்துரைக்கப்படுமென எதிர்பார்த்திருந்தேன்.

Art Direction

“Alice in Wonderland”
Production Design: Robert Stromberg; Set Decoration: Karen O'Hara
“Harry Potter and the Deathly Hallows Part 1”
Production Design: Stuart Craig; Set Decoration: Stephenie McMillan
Inception”
Production Design: Guy Hendrix Dyas; Set Decoration: Larry Dias and Doug Mowat
“The King's Speech”
Production Design: Eve Stewart; Set Decoration: Judy Farr
“True Grit”
Production Design: Jess Gonchor; Set Decoration: Nancy Haigh

ஆலிஸ் அல்லது இன்செப்ஷன். Harry Potter படமே எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை! 

Cinematography


“Black Swan” Matthew Libatique
“Inception” Wally Pfister
“The King's Speech” Danny Cohen
“The Social Network” Jeff Cronenweth
“True Grit” Roger Deakins

இதில் எல்லா படங்களுமே மிக அருமையான ஒளிப்பதிவில் எடுக்கப்பட்டிருப்பதால் கணிப்பது மிக சிரமம். சோஷியல் நெட்வொர்க்கைக் காட்டிலும் இன்செப்ஷன் மற்றும் ப்லாக் ஸ்வான் ஒளிப்பதிவு பிடித்திருந்தது. The King's Speech கூட !!

Costume Design

“Alice in Wonderland” Colleen Atwood
“I Am Love” Antonella Cannarozzi
“The King's Speech” Jenny Beavan
“The Tempest” Sandy Powell
“True Grit” Mary Zophres

Directing


“Black Swan” Darren Aronofsky
“The Fighter” David O. Russell
“The King's Speech” Tom Hooper
“The Social Network” David Fincher
“True Grit” Joel Coen and Ethan Coen

The Social Network க்காக David Fincher பெறுவார். இந்த ஆண்டு இப்படம் அதிக விருது பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Tom Hooper போட்டியாக இருப்பார். Christopher Nolan பரிந்துரைக்கப்படுவார் என்று எதிர்பார்த்திருந்தேன்.

Documentary (Feature)


“Exit through the Gift Shop” Banksy and Jaimie D'Cruz
“Gasland” Josh Fox and Trish Adlesic
“Inside Job” Charles Ferguson and Audrey Marrs
“Restrepo” Tim Hetherington and Sebastian Junger
“Waste Land” Lucy Walker and Angus Aynsley

Documentary (Short Subject)


“Killing in the Name” Nominees to be determined
“Poster Girl” Nominees to be determined
“Strangers No More” Karen Goodman and Kirk Simon
“Sun Come Up” Jennifer Redfearn and Tim Metzger
“The Warriors of Qiugang” Ruby Yang and Thomas Lennon

Film Editing


“Black Swan” Andrew Weisblum
“The Fighter” Pamela Martin
“The King's Speech” Tariq Anwar
“127 Hours” Jon Harris
“The Social Network” Angus Wall and Kirk Baxter

இவற்றில் 127 ஹவர்ஸ் சிறப்பாக இருந்தது. என்றாலும் Black Swan மற்றும்  The Social Network ஆகியவை போட்டியாக இருக்கலாம். The King's Speech கூட சிறப்பான எடிட்டிங்தான். இது கொஞ்சம் கடினமான போட்டி!

Foreign Language Film


“Biutiful” Mexico
“Dogtooth” Greece
“In a Better World” Denmark
“Incendies” Canada
“Outside the Law (Hors-la-loi)” Algeria

In a Better World படம் கோல்டன் க்ளோப் பெற்றிருக்கிறது!.

Makeup


“Barney's Version” Adrien Morot
“The Way Back” Edouard F. Henriques, Gregory Funk and Yolanda Toussieng
“The Wolfman” Rick Baker and Dave Elsey

Music (Original Score)


“How to Train Your Dragon” John Powell
“Inception” Hans Zimmer
“The King's Speech” Alexandre Desplat
“127 Hours” A.R. Rahman
“The Social Network” Trent Reznor and Atticus Ross

ஹான்ஸ் ஜிம்மர், அல்லது ரஹ்மான்.. The Social Network இன் Trent Reznor மற்றும் Atticus Ross இன் இசையும் பிரமாதமாக இருந்தது. தவிர இவர்களிருவரும் கோல்டன் க்ளோபும் பெற்றிருக்கிறார்கள். இந்த பிரிவில் ரஹ்மான் பெறுவது கடினமாக இருக்கும்!!

Music (Original Song)


“Coming Home” from “Country Strong” Music and Lyric by Tom Douglas, Troy Verges and Hillary Lindsey
“I See the Light” from “Tangled” Music by Alan Menken Lyric by Glenn Slater
“If I Rise” from “127 Hours” Music by A.R. Rahman Lyric by Dido and Rollo Armstrong
“We Belong Together” from “Toy Story 3" Music and Lyric by Randy Newman

இந்த நான்கு பாடலையும் கேட்டாலும் அடிக்கடி கேட்ட If I Rise பாடலே பிடித்திருந்தது. ஒருவேளை ரஹ்மான் மற்றும் டைடோ காரணமாக இருக்கலாம். இந்த பிரிவில் Country Strong தவிர வேறெந்த படமும் கோல்டன் க்ளோபுக்கு பரிந்துரை செய்யப்படவில்லை. அப்பிரிவில் Burlesque படத்தின் You Haven't Seen the Last of Me பாடலே விருது பெற்றிருந்தது.

Best Picture


“Black Swan” Mike Medavoy, Brian Oliver and Scott Franklin, Producers
“The Fighter” David Hoberman, Todd Lieberman and Mark Wahlberg, Producers
“Inception” Emma Thomas and Christopher Nolan, Producers
“The Kids Are All Right” Gary Gilbert, Jeffrey Levy-Hinte and Celine Rattray, Producers
“The King's Speech” Iain Canning, Emile Sherman and Gareth Unwin, Producers
“127 Hours” Christian Colson, Danny Boyle and John Smithson, Producers
“The Social Network” Scott Rudin, Dana Brunetti, Michael De Luca and Ceán Chaffin, Producers
“Toy Story 3” Darla K. Anderson, Producer
“True Grit” Scott Rudin, Ethan Coen and Joel Coen, Producers
“Winter's Bone" Anne Rosellini and Alix Madigan-Yorkin, Producers

கடுமையான போட்டி இப்பிரிவில் நிலவுகிறது. சென்றமுறை போலவே இம்முறையும் பிக்ஸர் தனது அனிமேஷன் படமான டாய் ஸ்டோரி 3 ஐ சிறந்த படத்திற்கு பரிந்துரை செய்திருக்கிறது. இந்த வருடம் கோல்ட க்ளோப் விருது பெற்ற சிறந்த படமான The Social Network இதிலும் சிறந்த படம் விருதைப் பெற வாய்ப்பு இருக்கிறது. இதற்கு The King's Speech போட்டிப்படமாக இருக்கும். Inception மற்றும் 127 Hours ஆகியவை விருது பெறுவதற்கான வாய்ப்பு குறைவுதான்.

Short Film (Animated)


“Day & Night” Teddy Newton
“The Gruffalo” Jakob Schuh and Max Lang
“Let's Pollute” Geefwee Boedoe
“The Lost Thing” Shaun Tan and Andrew Ruhemann
“Madagascar, carnet de voyage (Madagascar, a Journey Diary)” Bastien Dubois

Short Film (Live Action)


“The Confession” Tanel Toom
“The Crush” Michael Creagh
“God of Love” Luke Matheny
“Na Wewe” Ivan Goldschmidt
“Wish 143” Ian Barnes and Samantha Waite

Sound Editing


“Inception” Richard King
“Toy Story 3” Tom Myers and Michael Silvers
“Tron: Legacy” Gwendolyn Yates Whittle and Addison Teague
“True Grit” Skip Lievsay and Craig Berkey
“Unstoppable” Mark P. Stoeckinger

Inception, Tron: Legacy ஆகிய இரண்டில் ஒன்று… இன்செப்ஷனுக்கு அதிக வாய்ப்பு உண்டு!

Sound Mixing


“Inception” Lora Hirschberg, Gary A. Rizzo and Ed Novick
“The King's Speech” Paul Hamblin, Martin Jensen and John Midgley
“Salt” Jeffrey J. Haboush, Greg P. Russell, Scott Millan and William Sarokin
“The Social Network” Ren Klyce, David Parker, Michael Semanick and Mark Weingarten
“True Grit” Skip Lievsay, Craig Berkey, Greg Orloff and Peter F. Kurland

இன்செப்ஷன்!!

Visual Effects


“Alice in Wonderland” Ken Ralston, David Schaub, Carey Villegas and Sean Phillips
“Harry Potter and the Deathly Hallows Part 1” Tim Burke, John Richardson, Christian Manz and Nicolas Aithadi
“Hereafter” Michael Owens, Bryan Grill, Stephan Trojansky and Joe Farrell
“Inception” Paul Franklin, Chris Corbould, Andrew Lockley and Peter Bebb
“Iron Man 2” Janek Sirrs, Ben Snow, Ged Wright and Daniel Sudick

இப்பிரிவில் Hereafterஐத் தவிர மற்ற படங்கள் பார்த்துவிட்டேன். சரியாக கணிக்க முடியவில்லை!

Writing (Adapted Screenplay)


“127 Hours” Screenplay by Danny Boyle & Simon Beaufoy
“The Social Network” Screenplay by Aaron Sorkin
“Toy Story 3” Screenplay by Michael Arndt; Story by John Lasseter, Andrew Stanton and Lee Unkrich
“True Grit” Written for the screen by Joel Coen & Ethan Coen
“Winter's Bone” Adapted for the screen by Debra Granik & Anne Rosellini

இப்பிரிவில் The Social Network ஐக் காட்டிலும் 127 Hours ன் ஸ்க்ரீன்ப்ளே அற்புதமாகத் தெரிகிறது. இவையிரண்டிற்கிடையே அதிக போட்டி நிலவ வாய்ப்பு இருக்கிறது! The Social Network  கோல்டன் க்ளோப் விருது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்கர் விருது சற்றே மாற்றம் தரலாம்.

Writing (Original Screenplay)


“Another Year” Written by Mike Leigh
“The Fighter” Screenplay by Scott Silver and Paul Tamasy & Eric Johnson;
Story by Keith Dorrington & Paul Tamasy & Eric Johnson
“Inception” Written by Christopher Nolan
“The Kids Are All Right” Written by Lisa Cholodenko & Stuart Blumberg
“The King's Speech” Screenplay by David Seidler

Inception மற்றும் The King's Speech ஆகிய இரண்டும் கடும் போட்டி போடுகின்றன.


The King's Speech மற்றும் The Social Network ஆகியவை அதிக இடங்களுக்குப் போட்டியிடுகின்றன. இவ்விரண்டுமே அதிக விருது பெற வாய்ப்பு இருக்கிறது. அதற்கு அடுத்து Black Swan, Inception, True Grit, Toy Story 3 போன்ற படங்கள் அதிக விருது பெறலாம். 127 Hours போன்றவை அதற்கும் அடுத்து அதிக விருதுகள் பெறலாம்!!

பிப்ரவரி 27 ல் விருது வழங்கும் விழா நடைபெறுகிறது!!

Source :
http://www.oscars.org/awards/academyawards/83/nominees.html
http://en.wikipedia.org/wiki/68th_Golden_Globe_Awards

the-social-network-poster_368x578

Direction    David Fincher
Starring    Jesse Eisenberg, Andrew Garfield, Justin Timberlake, Brenda Song, Rooney Mara, Rashida Jones, Armie Hammer, Max Minghella, Joseph Mazzello
Music Trent Reznor, Atticus Ross
Year 2010
Language English
Genre Biography, Drama

மார்க் ஜூக்கர்பெர்க் (Mark Zuckerberg) எனும் 26 வயது மாணவனைப் பற்றி யாரும் அவ்வளவாக கேள்விப்பட்டிருக்க முடியாது. கடந்த ஆறுவருடங்களில் மிக சீக்கிரமாகவே கோடீஸ்வரனான இளைஞன். 2010 ம் வருடத்தின் சிறந்த மனிதராக டைம் இதழ் தேர்ந்தெடுத்திருக்கும் பில்லினியர்.. யாருக்குத் தெரியும்?? ஆனால் அவன் உருவாக்கிய facebook.com ல் இணையாத இணையவிரும்பிகளையோ, அல்லது கேள்விப்படாதவர்களையோ பார்ப்பது மிக மிக அரிது.

1000px-Facebook.svgதகவல் பரிமாற்ற சேவைகளில் SMS க்கு அடுத்ததாக Facebook கருதப்படுகிறது. இன்று இந்நொடி நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை எனது status ல் என் நண்பர்கள் அனைவரும் அறிந்து கொள்ளும்படி facebook.com வசதி செய்துதருகிறது இலவசமாகவே.. எனக்குக் கீழ் பலநூறு நண்பர்கள்… அவர்களின் Activities, அவர்களுக்குக் கீழ் பலநூறு நண்பர்கள்…. இப்படியே நீளும் இந்த பட்டியல், ஹார்வார்ட் பல்கலைக் கழக மாணவரான மார்க் ஜூக்கர்பெர்கிடமோ மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸிடமோ, அல்லது எதிர்வீட்டு ஃபிகர் மோனிகாவிடமோ போய் நிற்கும். Facebook பற்றி விவரித்துக் கொண்டிருப்பதில் அர்த்தமேயில்லை. ஏனெனில் இதைப் படிக்கும் அத்தனை பேருக்கும் Facebook ல் கணக்கு இருக்கும். ஆனால் இதனை உருவாக்க மார்க் எத்தனை சிரமப்பட்டிருப்பார்… நமக்குக் கீழ், நமக்குக் கீழென 600 மில்லியன் நண்பர்களை அவர் இணைத்து வைக்க அவர் எத்தனை எதிர்களை சம்பாதித்திருப்பார்? The Social Network திரைப்படம் facebook நிறுவன ஆரம்பிப்பதில் தடுமாற்றத்தையும், சிரமங்களையும், அவையனைத்தையும் தாண்டி வெற்றிபெறுதலையும் பற்றி கூறுகிறது. FACEB_STORY_D2617463_154332

தன் காதலி Erica Albright உடனான பிரிவின் விரக்தியிலிருக்கும் மார்க் ஜூக்கர்பெர்க் (Mark Zuckerberg) ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவிகளின் புகைப்படங்களை இணையத்தின் வழியே திருடி Facemash.com எனும் தளத்தை உருவாக்கி ஒவ்வொரு மாணவிகளுக்கும் ரேட்டிங் போடும் முறையை ஆரம்பிக்கிறார். இதனால் ஹார்வர்ட் நெட்வொர்கே ஸ்தம்பித்து போகும் நிலையில் இந்த செயலுக்காக தண்டிக்கப்படுகிறார் மார்க். பின்னொரு நாளில் மார்க்கை இரட்டையர்களான கேமரன் மற்றும் டைலர் (Cameron, Tyler) அமெரிக்க வாழ் இந்தியரான திவ்யா நரெந்திரா (Divya Narendra) ஆகிய மூவரும் சந்தித்து நண்பர்களை இணைக்கும் இணையதளம் ஒன்றை ஆரம்பிக்கலாம் என்று பேசுகிறார்கள். அந்த ஐடியா வொர்கவுட் ஆகும் என்று அறிந்து கொண்ட மார்க், அவர்களை விட்டுவிட்டு தனது நண்பனான எடர்டோ சாவரைன் (Eduardo Saverin) உதவியுடன் தானே ஆரம்பிக்க, பிரச்சனை ஆரம்பிகிறது. மெல்ல மெல்ல ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து மற்ற பல்கலைக் கழகங்களுக்கும், பள்ளிகளுக்கும் Facebook அனுமதி அளிக்க, ஐடியா கொடுத்த மூவரும் ஹார்வாட் பிரஸிடெண்ட்டை சந்தித்து முறையிடுகிறார்கள். ஆனால் பலனில்லை.

Blog Art - The Social Network6இதனிடையே, Napster எனும் தளத்தின் நிறுவனரான ஷான் பார்கரை (Sean Parker) சந்திக்கும் மார்க், அவரின் உந்துதலினாலும் உதவியினாலும் Facebook ஐ நிலைநிறுத்த, எடர்டோவுக்கு பொறாமை வளருகிறது. ஷான் பார்க்கரை வெறுத்து, மார்க்குக்கு தனது பண உதவியை நிறுத்திவிட, ஒரு பெறும் நிறுவனத்தின் முதலீட்டுடன் Facebookஐ வளர்க்கிறார் மார்க்.. Facebook ல் எடர்டோவின் பங்குகள், ஐடியா கொடுத்து அறிவாளித்தனமான திருட்டு என்று வழக்கு தொடர்ந்த மூவரின் கதி, ஷான் பார்க்கர் என்னவானார் போன்றவற்றோடு, தன் முன்னாள் காதலி எரிகாவுடன் மார்க் இணைந்தாரா என்பவற்றை சொல்லி முடிக்கிறது The Social Network.

ஒரு பார்ட்னர்ஷிப் நிறுவனம் ஆரம்பிப்பதிலுண்டான சிக்கல்கள் ஒவ்வொரு முதலீட்டாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் நன்கு தெரியும். அதைவிட அந்நிறுவனத்தை சிக்கலின்றி நடத்திச் செல்ல தனித் திறமையே வேண்டும். தடைகளைத் தகர்த்து ஹாயாசமாக அமர்ந்து பதில் சொல்லும் மார்க் ஜூக்கர்பெர்க் ஒரு ஜீனியஸ் என்றே சொல்லத் தோணுகிறது. வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் பொழுது எட்வர்டோவுக்கு இருந்த பதட்டம் துளிகூட மார்க்கிடம் இல்லாதது வியப்பாகவும் அவரது திறமையின் மேல் மதிப்பும் மிகுகிறது.

இயக்குனர் David Fincher மற்றும் திரைக்கதையாசிரியர் Aaron Sorkin இப்படத்தை எப்படி சலிப்பில்லாமல் கொண்டு சென்றார்கள் என்றே தெரியவில்லை. முழுக்க முழுக்க இண்டெலெக்சுவலாகவே செல்லும் இப்படத்தில் விசாரணை நடைபெறுமிடத்தில் கேள்விகளுக்குப் பதிலாக காட்சிகளை நகர்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. Trent Reznor, மற்றும் Atticus Ross ன் இசை படத்திற்கு மிகப்பெரும் பலம். என்றாலும் ரஹ்மானின் 127 Hours அளவுக்கு இல்லை என்பது என் கருத்து.

மார்க் ஜூக்கர்பெர்க்காக நடித்திருக்கும் Jesse Eisenberg பேசும் எந்த காட்சியையும் சப்டைட்டில் இல்லாமல் பார்த்துவிடாதீர்கள். ஒரு எழவும் புரியாது. அவ்வளவு வேகமாக பேசுகிறார். சிலசமயம் ஃபாஸ்ட் ஃபார்வர்டில் படம் செல்கிறதோ என்ற உணர்வு ஏற்பட்டுவிடுகிறது. அலட்டிக் கொள்ளாத நடிப்பு. படம் முழுக்க மனதில் எதையோ மறைத்துக் கொண்டே வரும்படியான நடிப்பு எட்வர்டோவாக நடித்திருக்கும் Andrew Garfield ன் உடையது. மற்றும் ஷான் பார்க்கராக நடித்திருக்கும் Justin Timberlake (பாப் பாடகர்) மார்க்கின் முன்னாள் காதலியான எரிகாவாக நடித்திருக்கும் Rooney Mara இன்னும் பல பாத்திரங்களின் நடிப்பு படத்திற்கு பலம்!!

சிறந்த படம் – Drama பிரிவில் கோல்டன் க்ளோப் வாங்கிவிட்ட இப்படம் பல ஆஸ்கர்களை வெல்லும் என்பதில் சந்தேகமில்லை!!


மார்க் ஜூக்கர்பெர்க்

450px-MarkZuckerberg

படத்தின் நாயகர்களோடு நிஜ உலக நாயகர்கள்

The-Social-Network-review

மார்க் ஜூக்கர்பெர்க்கின் முன்னாள் காதலி Erica Albright

Erica

Trailer

facebookல் என்னைத் தொடர.........

http://www.facebook.com/aadava

2002_Talk_to_Her

Direction

Pedro Almodóvar

Starring   

Javier Cámara, Darío Grandinetti, Leonor Watling, Geraldine Chaplin, Rosario Flores

Music  

Alberto Iglesias

Year

2002

Language   

Spanish

Genre

Drama, Romance

Warning : காமம், நிர்வாணம் - குழந்தைகள் பார்ப்பதற்கு ஏற்றதல்ல.

காதலின் இழப்பினால் தள்ளப்படும் தனிமையின் இருப்பை, காதலின் மிக ஆழத்தை, அதீத காதலின் உச்சமான காமத்தின் புரிதலைப் பற்றி அழகாகவும் அமைதியாகவும் பேசுகிறது பெட்ரோ அல்மதோவரின் Hable con Ella (Talk to her) திரைப்படம்.

காதலியோடு பேசுதல் ஒவ்வொருவருக்கும் விருப்பமானது. ஆனால் காதலி அழிந்து போன நினைவில் சிக்கியிருக்கும் பொழுது (Coma), இன்னும் தன்னைப் பற்றி அவ்வளவாக அறிந்திராத பொழுது பேசுதல் எந்தவகையானது? நீங்கள், உங்கள் காதலி செயலற்ற சூழ்நிலையிலிருக்கும் பொழுது எவ்வாறு தாங்கிக் கொள்வீர்கள்? ஒரு தாயாக?, ஒரு செவிலியா?, ஒரு காதலனாக??

ஆண் செவிலியான பெனிகோ, (Benigno) பாலே நடன மாணவியான அலிசியாவை (Alicia) ஒருதலையாக விரும்புகிறார். ஒரு கார் விபத்தில் அடிபட்டு கோமாவில் கிடக்கும் அலிசியாவை சுயநலம் கலந்த கடமையோடு தினமும் கவனித்துக் கொள்கிறார் பெனிகோ.

பயண எழுத்தாளரான மார்கோ (Marco) ஒரு சந்தர்ப்பத்தின் கீழ் காளைச்சண்டை வீராங்கனையான லிடியாவைக்(Lydia) காதலிக்கிறார். இருவரும் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளும் முன்னரே, ஒரு காளைச்சண்டை விபத்தில் லிடியா சிக்கி கோமா நிலையில், அலிசியா இருக்கும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். talktoherபெனிகோ மற்றும் மார்கோ இருவரின் நட்பும் புரிதலும் கோமாவில் கிடக்கும் காதலியின் மீதுண்டான ஆழமான காதலுமாக நாட்கள் செல்ல, லிடியாவின் முன்னாள் காதலன் லிடியாவை கவனித்துக் கொள்வதாகக் கூறவே, அங்கிருந்து பயணமாக ஜோர்டானுக்குச் செல்கிறார் மார்கோ, அதேவேளையில் கோமாவில் கிடக்கும் அலிசியா கர்ப்பமாக இருப்பதாகக் கூறி பெனிகோ சிறையில் அடைக்கப்படுகிறார். சிலமாதங்கள் கழித்து லிடியா இறந்ததை அறியும் மார்கோ, சிறையில் பெனிகோ இருப்பதையும் அறிந்து அவரை வெளியே கொண்டுவர முயற்சி செய்கிறார். கர்ப்பமாக இருக்கும் அலிசியா என்னவானார்? சிறையில் இருக்கும் பெனிகோவுக்கு மார்கோ உதவி செய்தாரா? போன்றவை இறுதியில்.. (படத்தில்: பெனிகோ, மார்கோ, அலிசியா மற்றும் லிடியா)

கோமாவில் இருப்பவர்களை எப்படி பராமரித்துக் கொள்வார்கள் என்று இதுவரையிலும் நான் அறிந்து கொண்டதேயில்லை. கோமாவில் இருப்பவர்களுக்கும் மூளையின் ஒருசில அன்றாட கட்டளைகள், மூச்சுவிடுவது, சிலசமயம் உறங்கி விழிப்பது, பெண்களின் தனிப்பட்ட உபாதைகள் போன்றவை இயங்கிக் கொண்டுதானிருக்கும். talktoher3பெனிகோவாக நடித்திருக்கும் Javier Cámara, அலிசியாவாக நடித்திருக்கும் Leonor Watling எந்தவித தயக்கமுமின்றி பராமரிக்கிறார். படுக்கையில் இருந்தபடியே அவளை சுத்தம் செய்வது, மஸாஜ் செய்வது, போன்றவற்றோடு மட்டுமின்றி அவளோடு பேசவும் செய்கிறார். கோமாவில் இருப்பவர்களோடு பேசுதல் என்பது முட்டாள்தனமானதாக நினைக்கும் மார்கோவிடமும் லிடியாவிடம் பேசுங்கள் என்கிறார். இந்த சூழ்நிலைகளில் நாம் பேசுவது காதலியுடனா அல்லது காதலனுடனா என்பது சந்தேகத்திற்குரிய முரணாக இருக்கிறது. இயல்பாகவும் அந்த இயல்பின் மேல் காதலின் ஆழத்தைப் புரிந்து கொள்வதாகவும் ஜேவியரின் நடிப்பு அமைந்திருக்கிறது. (படத்தில் : தன் காதலிக்கு மிகவும் பிடித்த நடனக்கலைஞரிடமிருந்து கையெழுத்து வாங்கியதை அவளுடன் பேசும் காட்சி)

மார்கோவாக Darío Grandinetti. நடனநிகழ்ச்சிகளில் மனதைப் பறிகொடுத்து அழுவதிலிருந்து துவங்குகிறார். ஆண்களுக்கேயுரிய பார்வையும் இயல்பும் தனிமையின் வலியும் மிகுந்தவராக வருகிறார். லிடியாவைப் பற்றி மருத்துவர் சொல்லிக் கொண்டிருக்க, கண் கலங்கியவாறே  வெளியேறும் மார்கோ, அலிசியாவின் ஆடையற்ற உடலைக் கண்டு மனம் ஒப்பாமல் திரும்பவதிலும், பின் அவரே அலிசியாவின் மார்பகங்களைப் பார்த்தவாறே அமர்ந்திருப்பதும் ஆண்களை நோண்டிப் பார்க்கும் நிகழ்வுகளின் புரட்டல்களை நடிப்பில் கொண்டுவந்துவிடுகிறார். இறுதிக் காட்சியில் பெனிகோவின் முடிவைப் படிக்கும் பொழுது அவருடைய இயல்பான நடிப்பு மனதை உருக்கிவிடுகிறது. காளைச்சண்டை வீராங்கனை லிடியாவாக வரும் Rosario Flores சண்டைக்கேற்ற உடல்வாகுடன் வருவதோடு, சிறப்பான நடிப்பையும் தருகிறார். படம் முழுக்க கோமாவிலேயே கிடக்கும் அலிசியாவாக வரும் Leonor Watling ங்கின் அப்பாவித்தனமான முகம் கண்களின் ஒரு சில காட்சிகளில் கண்களின் வழியே ஒன்றும் தெரியாமையை நடிப்பால் காட்டிவிடுவது அபாரமானது.

அலிசியாவிடம் எல்லா விஷயங்களையும் பகிரும் பெனிகோ தான் Amante Menguante (Shrinking Lover)எனும் கருப்பு வெள்ளை சினிமாவுக்குச் சென்று வருவதைக் கூறுவார். காதலியின் வேதியல் ஆராய்ச்சியின் விளைவினால் காதலன் உயரம் குறைந்து கொண்டே வருவான். காதலியின் சந்தோஷத்திற்காக காதலன் அவளின் யோனிக்குள் வாழ்ந்துவருவானாக படம் முடியும். உண்மையில் காதலின் உச்ச சந்தோஷம் காமம் தானா? அல்லது வாழ்க்கையை அர்பணிக்கக்கூடிய அசட்டுத்தனமான வெளிப்பாடா?

படத்தை மூன்றுவிதமாக பிரிக்கலாம். மார்கோவுக்கும் லிடியாவுக்கும் உள்ள காதல், அலிசியாவின்மேல் பெனிகோவின் ஆழமான காதல், பெனிகோ – மார்கோ நட்பு. முடிவில் அலிசியாவுக்கும் மார்கோவுக்கும் ஏற்படும் பரிச்சயம் எங்கே கொண்டு போகும் என்று எழுத்தாலேயே காண்பித்திருப்பது சிறப்பு. விளைவுகளை மட்டுமே பேசும் இப்படத்தில் விளைவுகளுக்கான காரணிகளைக் காட்டுவதில்லை. அலிசியாவுக்கு விபத்து நேர்வதை, அலிசியா கர்ப்பமாவதை, பின் கோமாவிலிருந்து மீள்வதை, லிடியா இறப்பதை என எந்த ஒரு காரணிகளையும் காட்டாமல் அதன் பின்னர் விளையும் விளைவுகளை படம் முழுக்கச் சொல்லிவிடுகிறார்கள்.

அலிசியாவிடம் பெனிகோ பேசும் ஒவ்வொரு காட்சிகளும் கவிதையானவை. அவள் தன் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள் என்று நம்புகிறான். அதற்கு பதிலும் தருவதாக எண்ணுகிறான். அவனது காதலின் முடிவு ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லையெனினும் பெட்ரோ அல்மதோவரின் இப்படம் ஒரு இனம் புரியாத காதலின் விளைவுகளை அமைதியாகப் பேசுகிறது.. பார்க்கவேண்டிய பல படங்களில் இதுவும் ஒன்று!

Trailer


Direction : Vetrimaran
Starring Dhanush, Taapsee Pannu, Kishore, Jeyabalan
Music : G. V. Prakash Kumar
Cinematography Velraj
Year : 2011
Language : Tamil
Genre : Drama, Action,

இரண்டு வருடங்களுக்கு முன்பு கோபிச்செட்டிப்பாளையத்தை அடுத்த ஓடத்துறையில் கட்டுச்சேவல் (சண்டைச்சேவல்) வாங்கச் சென்ற பொழுதுதான் எனக்கு முழுவிபரமும் தெரிந்தது. அப்பொழுது அந்த சேவலை 10000 ரூபாய் என்றார்கள். சுமார் 4 கிலோ இருக்கும். கிழட்டுச்சேவல் என்று நினைத்துவிட வேண்டாம். எப்படியும் ஐந்தாறு மாதம் மட்டுமே அதன் வயதாக இருக்கும். அப்படியொரு கம்பீரம், உயரம், எடை.. பழக்கமில்லாதவர்கள் அந்த சேவலை நெருங்க முடியாது. அதன் கூர்ந்த விரல்நகம் நம்மைக் கீறிவிடும்.. எங்கள் வீட்டுச் சேவல்கள் சண்டைக்கு தொண்டை முடி விறைத்துத் தூக்க நிற்பதையும் சண்டையிடுவதையும் அடிக்கடி பார்த்திருக்கிறேன். சேவலும் சேவச்சண்டையும் நமக்கு புதிதில்லை.

வளர்ச்சியின் மீதான பொறாமையும் வீழ்ச்சியின் பயமும் விசுவாசத்தின் ஆழமும் கிராமிய மக்களின் மனதில் ஊறிக் கிடக்கும் பாரம்பரிய விளையாட்டின் வெற்றி தோல்வியினால் எழும் மான அவமானங்களும் சொல்லப்படும் திரைப்படம் ஆடுகளம். மதுரை வட்டாரத்தையும், சேவக்கட்டு ஆடும் மனிதர்களின் மனநிலையையும் திரைக்குக் கொண்டுவந்ததில் உண்டான உழைப்பு அபாரமானது. அதற்காகவே இயக்குனரைப் பாராட்டத் தோணுகிறது. களத்தின் எழும் மண் மனதின் மேற்புறத்தில் படிந்திருப்பது, திரைப்படத்தின் வெற்றி...

இன்ஸ்பெக்டர் இரத்தினவேலு, சேவக்கட்டுச் சண்டையில் கில்லாடி, அவரை ஜெயிக்க ஜில்லாவில் எவனும் கிடையாது ஒருத்தரைத் தவிர.. அது பேட்டைக்காரன்... பேட்டைக்காரனின் மூன்று மிக முக்கிய ஆட்கள், கருப்பு, தொரை, மற்றும் கோழி வைத்தியம் செய்யும் அயூப். கருப்புக்கு பேட்டைக்காரன்தான் எல்லாம். யாரும் அவரைப் பற்றி தவறாகப் பேச அனுமதிக்கமாட்டான். பேட்டைக்காரன் வளர்க்கும் சேவல்கள் பற்றிய உத்திகள் வெளியில் யாருக்கும் தெரியாது. இரத்தினவேலுக்குத் தெரியாமல் அவனது விசுவாசிகள் பேட்டைக்காரனின் சேவலைத் திருடிச் செல்வதிலிருந்து படம் துவங்குகிறது. சேவச்சண்டை நடைபெறக்கூடாது என்பதால் அவ்வபோது ரெய்டும் நடக்கும், அதை நடத்தியது இரத்தினவேலுதான் என்று நினைத்து, இனிமேல் இரத்தினவேலுவோடு சேவச்சண்டை வேண்டாம் என்று ஒதுங்குகிறார் பேட்டைக்காரன். எப்படியாவது ஒருமுறையாவது சேவச்சண்டையில் பேட்டைக்காரனை ஜெயித்தே ஆகவேண்டும் எனும் வெறியோடு இருக்கும் இரத்தினவேலு அயூப்பை ஒரு விபத்தில் கொன்றுவிட, அயூப்பின் குடும்பத்திற்கு உதவி செய்யும் பொருட்டு “அயூப் நினைவுக்கோப்பை” சேவச்சண்டைக்கு இரத்தினவேலுவிடம் அனுமதி வாங்கச் செல்லுகிறார் பேட்டைக்காரன். தன்னோடு சேவச்சண்டையில் ஆடும்படி கூற, போட்டி தயாராகிறது. இதற்காக சேவலைத் தயார் செய்யும் பேட்டைக்காரன், சோதனைச் சண்டையில் தோற்றுப்போன சேவலை அறுத்து வீசும்படி ஒவ்வொருவரிடமும் கூறுகிறார். கருப்பு வளர்த்த சேவலும் தோற்றுப் போக, அறுத்து வீசச்சொல்லுகிறார். ஆனால் கருப்பு தான் வளர்த்த சேவலை அறுப்பதில் இஷ்டமின்றி மேலும் நல்லமுறையில் வளர்க்கிறார். சண்டையும் தயாரானது. இரத்தினவேலுவின் சேவல்கள் தொடர்ந்து தோற்றுக்கொண்டேயிருக்க, அவர் பெங்களூருவிலிருந்து சேவலை இறக்குமதி செய்கிறார். பெங்களூரு சேவல்களின் கம்பீரத்தைப் பார்த்து நமது சேவல்கள் தோற்றுவிடும் என்றெண்ணி, போட்டியிடவேண்டாம் என்று சொல்கிறார் பேட்டைக்காரன். அவரது சொல்லையும் மீறி, அறுத்து வீசச்சொன்ன சேவலை களமிறக்கி, மூன்று லட்சம் வரையிலும் ஜெயித்துவிடுகிறான் கருப்பு.

போட்டியில் தோற்றதன்படி, இன்ஸ்பெக்டர், மொட்டையடித்து மழித்துக் கொண்டு ஊரைவிட்டே சென்றுவிடுகிறார். கருப்பின் வெற்றியை எல்லாரும் கொண்டாட, தன் பேச்சைக் கேட்காமல் சேவலை வளர்த்த கருப்பு மீது பொறாமையும் வன்மமும் கொள்கிறார் பேட்டைக்காரன், அது மெல்ல மெல்ல பழிவாங்குதலாக மாறுகிறது. கருப்புதான் அடுத்த பேட்டைக்காரன் என்றும், பேட்டைக்காரனுக்கு இனி சேவலை மதிப்பிடத் தெரியாது எனவும் உடனிருப்போர் கூற, அவமானமும், தனது வீழ்ச்சியும் தாங்காத பேட்டைக்காரன் கருப்பை ஒவ்வொரு விதமாக, மெல்ல மெல்ல பழிவாங்குகிறார்... இது தெரியாத கருப்பு, ஒவ்வொன்றாக இழக்க, இறுதியில் தொரைக்கும் கருப்புக்கும் சண்டை மூட்டிவிடும் பேட்டைக்காரன் என்னவானார்? கருப்பு, பேட்டைக்காரனின் வன்மத்தை அறிந்தானா? என்பது பரபரப்பான கிளைமாக்ஸ்.

முதல் பாதி களச்சண்டை என்றால் இரண்டாம் பாதி மனச்சண்டை. கருப்பாக வரும் தனுஷ் வாய்மொழியிலிருந்து உடல்மொழி வரை மதுரைக்காரனாகவே மாறியிருக்கிறார். மனதிலிருப்பதை முகத்தில் கொண்டுவர அவருக்கு லாவகமாக வருகிறது. பேட்டைக்காரன் தன் மீது கோபம் கொள்வதிலிருந்து அவரது பொறாமையையும் பழிவாங்கலையும் அறிந்து கொள்வது வரை ஒவ்வொரு உணர்ச்சிகளையும் மிக அழகான நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார் தனுஷ். தனுஷின் மொத்த சினிமாகிரபியில் இந்த படம் என்னைப் பொறுத்தவரையில் முதலிடம் பெறுகிறது. அவருக்கு இணையான நடிப்பு ஈழக்கவிஞர் வ.ஐ.ச ஜெயபாலன். அடர்ந்த மீசையும் மனதில் வஞ்சமும் மிகுந்த மனிதராக பட்டையைக் கிளப்பியிருக்கிறார் மனிதர். பிற்பாதியில் தனுஷைப் பார்க்கும்பொழுதெல்லாம் தனது பழிவாங்கல் தவறானது என்பது போல கூனிக் குறுகும் அவரது விழிகளிலேயே, மனப்போராட்டத்தை மிக அற்புதமாக சொல்லியிருக்கிறார். இயக்குனரின் இப்பாத்திரத்தேர்வு மிக நேர்த்தியானது. தொரையாக வரும் கிஷோருக்கும் நல்ல வாய்ப்பு.

வெற்றிமாறன்!!! இரண்டாவது படம் என்று சொல்லவேமுடியவில்லை. தமிழ்சினிமாவில் ஒருசிலர்தான் புதுமை எதாவது செய்வார்கள். இந்த திரைப்படமும் அதன் கதைப்பிண்ணனியும் புதுமையானதுதான். பாடல்களுக்கென்று தனிக்காட்சிகள் இல்லை, மிக யதார்த்தமான சண்டைக்காட்சிகள், கிராமிய மக்களின் விளையாட்டை காண்பித்திருப்பது, அழுத்தமான பேட்டைக்காரன் - கருப்பு மனநிலைக் காட்சிகள், போன்றவை குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் இரவில் செல்லும் கதைக்களனை வேல்ராஜின் ஒளிப்பதிவு மிக அழகாக காட்டுகிறது. ஜி.வி பிரகாஷ்குமாரின் இசை படத்தைக் கெடுக்கவில்லை. ஓரளவு நல்ல இசையையே கொடுத்திருப்பதும் ஆறுதல்.

இறுதிக் காட்சியிலிருந்து ஆரம்பித்து, இறுதிக் காட்சியிலேயே முடியும் திரைக்கதை... சில வெளிநாட்டு படங்களின் பாதிப்பு இருப்பதாக ஒத்துக்கொள்ளும் இயக்குனரின் நேர்மைக்கு ஒரு சல்யூட்


ஆனால், படத்தின் நீளம் மிக அதிகம். நீண்ட நேரம் படம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் எனும் உணர்வை ஏற்படுத்திவிடுகிறது. காதல் காட்சிகளை ரசிகர்களை முன்னிட்டே இயக்குனர் வெற்றிமாறன் சேர்த்திருப்பார் என்று நினைக்கிறேன். ஒரு சில காட்சிகளை கத்திரித்துவிட்டு, சுருக்கினால் படம் இன்னும் மிகச்சிறப்பாக இருந்திருக்கும் என்பது என் கருத்து. அசல் சேவச்சண்டைகளை திரையில் காண்பிக்காதது ஒரு பெரும் குறையாகத் தெரிகிறது. (வேறு வழியுமில்லை) சேவச்சண்டைகள் பத்து பதினைந்து நிமிடங்கள் ஒன்றோடொன்று ஆக்ரோஷமாக மோதும். அதனை கிராஃபிக்ஸ் ஓரளவு காண்பிக்கிறது.

இந்த விமர்சனத்தில் ஹீரோயினைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை என்பதால் கீழ்காணும் படத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்!!



தமிழ்சினிமாவில் இந்தமாதிரி படங்கள் வருவது மிக அபூர்வம். கண்டிப்பாக பார்க்கவேண்டிய படங்களில் இதுவும் ஒன்று!!

127-Hours

Direction

Danny Boyle

Written

Simon Beaufoy, Danny Boyle

Based on

Between a Rock and a Hard Place by Aron Ralston

Starring   

James Franco, Amber Tamblyn , Kate Mara

Music

A. R. Rahman

Year 2010
Language English

Genre

Biography, Adventure, Drama

மீண்டும் டானி பாய்ல் (Danny Boyle) மற்றும் ரஹ்மான் கூட்டணி. இம்முறை Aron Ralston என்பவரின் வாழ்வில் நிகழ்ந்த மறக்கமுடியாத சம்பத்தை திரையில் கொண்டுவந்திருக்கிறார்கள்.

ஆரன் ரால்சன் ஒரு மலையேறும் விரும்பி. ஏப்ரம் 25, 2003 ஆம் வருடம் வெள்ளிக்கிழமை இரவு அமெரிக்க மாகாணங்களில் ஒன்றான Utah பாலைவனப்பகுதியில் மலையேறுதல் பொருட்டு கிளம்பிச் செல்லுகிறார். மலையேறும்பொழுது தேவையான பொருட்கள், உணவு, நீர், காமெரா முதற்கொண்டு எல்லாவற்றையும் எடுத்துச் செல்கிறார். 127 Hours Movie மறுநாள் அந்த மலைப்பகுதியில் மெகன், (Megan) கிரிஸ்டி (Kristi) எனும் இரு பெண்கள் வழிதெரியாமல் திணறி நிற்பதைக் கண்டு அவர்களுக்கு வழிகாட்டுகிறான் (படத்தில் இருப்பவர்கள் ரால்சன், மெகன், கிரிஸ்டி) இருவரையும் ஒரு குகைப்பகுதிக்கு அழைத்துச் சென்று அங்குள்ள நீர்நிலையைக் காட்டி அவர்களோடு நல்ல நட்பு வளர்த்துக் கொள்கிறான்.

ரால்சன் தான் தேடிவந்த மலைச்சந்தில் இறங்குவதற்காக பாதுகாப்பாக இறங்கிக் கொண்டிருக்கையில் தவறுதலாக அச்சந்தினிடையே முட்டிக் கொண்டிருந்த ஒரு பெரிய பாறாங்கல் மீது கால்வைத்து, தடுக்கி விழுகிறான். அந்த பாறாங்கல்லும் முட்டுதலின்றி அவனோடு சந்தினுள் இறங்க, அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைக்கிறான்… ஆனால் அவனது கீழிடது கை சந்துக்கும் பாறாங்கல்லுக்குமிடையே சிக்கிக் கொண்டிருக்க…. 127 Hours துவங்குகிறது. ஆரன் ரால்ஸன் பாறையில் சிக்கியிருத்தல் ரால்சனாக நடித்திருக்கும் ஜேம்ஸ் ஃப்ரான்கோ (James Franco) ஒரு கணம் என்ன நடந்தது என்று அவதானிக்கும் போது மிகச்சிறப்பான எக்ஸ்பிரஷன்ஸ் வெளிப்படுத்தி யிருக்கிறார். மெல்ல முட்டி மோதி பாறாங்கல்லை அப்புறப்படுத்த முயன்றும் பலனில்லை, அது ஏழெட்டு பேர் இணைந்து தூக்கவேண்டிய மிகப்பெரிய பாறாங்கல்.  (படத்தில் : பாறையில் கை சிக்கியவாறு ஆரன் ரால்ஸன்) சற்றே ஆசுவாசமாகி மேலே யாராவது இருக்கிறார்களா என, தான் சந்தித்த பெண்களான கிரிஸ்டி மற்றும் மெகனை அழைக்கும் பொழுது காமரா அந்த குகைச்சந்திலிருந்து வெளியேறும் காட்சி, ஒருகணம் நம்மை உறையவைக்கும் காட்சி. ரால்ஸன் எவ்வளவு ஆழமான பகுதியில் சிக்கியிருக்கிறார் என்பதை நினைக்கவும் முடியாத சம்பவம்.

ரால்ஸன் பொறுமையாக யோசிக்கிறார். என்ன செய்யலாம்? தன்னிடம் இருக்கும் பொருட்களையெல்லாம் பாறைமேல் வைத்து யோசிக்கிறார்.  ஒரு தரமற்ற சைனா கத்தியொன்றினால் பாறையைக் குடைந்து பார்க்கிறார். கூடவே இதனை சுய ஒளிப்பதிவும் செய்து கொள்கிறார். தான் சிக்கியிருக்கும் பாறைக்கு சற்று மேலேயிருக்கும் இன்னொரு பாறையின் மேல் கொண்டுவந்திருந்த கயிறை சிக்கவைத்து மெல்ல இழுக்க முயற்சித்தும் பலனில்லை.  இரவு நெருங்குகிறது கடுமையான குளிர்.., ஆகாரம் குறைவு. ஒரு லிட்டர் தண்ணீர் மிச்சம்.. மேலே சந்தித்த பெண்கள் அழைத்திருந்த ஒரு பார்ட்டிக்கு இந்நேரம் சென்றிருக்கலாம். ரால்ஸன் நினைத்துக் கொள்கிறார். வந்திருந்த காரில் கிடக்கும் ஜூஸ் பாட்டில், ஞாபகத்திற்கு வருகிறது. தாகம்.. (இந்த காட்சியில் ஒளிப்பதிவுடன் இணைந்த CG மிகப்பிரமாதமானது)

சிறுவயதில் அவனது அப்பா இதே இடத்திற்கு அழைத்து வந்தது,. தன் தங்கையின் பியனோ வாசிப்பு, நண்பர்களோடு பார்ட்டி, காதலி தன் காதலைச் சொன்னது, பின் இருவரும் பழகி பிரிந்தது, சட்டென்று அங்கே பெரும்மழை பொழிந்து, பாறைச்சந்து முழுக்க நீரால் நிறைய பாறையை எளிதில் விலக்கி தப்பியோடி காதலியின் வீட்டின் முன் நிற்பதான கனவு, போன்றவை நினைவுகளூடாக வருகின்றது. காமராவில் அவ்வபோது ஒளிப்பதிவும் செய்து கொண்டு, ஒரு டாக்‌ஷோவில் கேள்வி பதில் கேட்பதைப் போல பேசிக் கொண்டும் இருக்கிறான். ஒரு கட்டத்தில் பிழைப்போம் என்று நம்பிக்கை பிறந்து பாறையிடுக்கில் சிக்கியிருக்கும் கையை தானே வெட்டியெடுத்து தப்பிக்கிறார் ரால்ஸன். அந்த பாறையோடு 5 நாட்கள் அதாவது 127 மணிநேரம் இருப்பதையே படத்தின் தலைப்பு காட்டுகிறது.

படத்தில் மிகவும் குறிப்பிடத்தகுந்த விஷயம் திரைக்கதை. நினைவுகளூடாகச் செல்லும் காட்சிகள், வித்தியாசமான பார்வையனுபவத்தைக் கொடுக்கிறது. இறுதி நெருங்க நெருங்க வேகமெடுக்கும் திரைக்கதையில், ரால்ஸன் தனக்குத் தொடர்புடைய மனிதர்கள், பொருட்கள் விர்ச்சுவலாக வந்து செல்வதை உணர்கிறார். பொதுவாக தனிமைப்படுத்தப்பட்ட ஒரு மனிதனின் நினைவுகள் அவ்வாறே இருக்கும்.

ரால்ஸனாக நடித்திருக்கும் ஜேம்ஸ் ஃப்ரான்கோ, ஸ்பைடர்மேனில் ஹாரியாக வந்து அறியப்பட்டவர். இவரது நடிப்பு மிகப் பிரமாதமாக இருக்கிறது. சந்தோஷம், துக்கம், ஏமாற்றம், அதிர்ச்சி, போன்ற ஒவ்வொரு உணர்ச்சிகளையும் தகுந்த நிலையில் வெளிப்படுத்தியிருப்பது விருது பெறக்கூடிய நடிப்பு. இப்படி விளக்குவதைவிடவும் படத்தில் பார்ப்பதே சிறந்தது… மெகனாக நடித்திருக்கும் Amber Tamblyn க்கும் , கிரிஸ்டியாக நடித்திருக்கும் Kate Mara க்கும் படத்தில் வேலை இல்லை..

ரஹ்மான்…. ரால்ஸன் சிக்கியபிறகு Liberation Begins எனும் கிதார் இசையை மீட்டுமிடம் சிலிர்க்கவைக்கும் இசை. கனவு காட்சியில் Liberation In A Dream சற்று வேகமான கிதார் மற்றும் இதரவாத்தியங்கள்.. மிகத்தரமான இசை. இறுதியில் டிடோவுடன் (Dido)  பாடும் If I Rise பாடலோடு படம் முழுக்க அமைதியான இசையை வழங்கியிருக்கிறார் என்றாலும் Slumdog Millionaire க்கு வழங்கியதைக் காட்டிலும் சற்று குறைவாகவே தெரிகிறது. கோல்டன் க்ளோபில் இவருக்கு  இன்செப்ஷனுக்கு இசையமைத்த Hans Zimmer பெரும் போட்டியாக இருப்பார் என்று நினைக்கிறேன்.  ரஹ்மானின் இசை குறித்து ஏற்கனவே இங்கே எழுதியிருக்கிறேன்.

Finally, டேனி பாய்ல்… 127 மணிநேரம் சிக்கியிருப்பதை சலிப்படையாத திரைக்கதையினாலும் அலுக்காத இயக்கத்தினாலும் காட்டியிருக்கும் பாயிலுக்கு நிச்சயம் விருது கிடைக்கும் என்று நினைக்கிறேன். IMDB Top 250 ல் இப்படம் இடம்பெற்றுள்ளது கூடுதல் தகவல். அனைவரும் அவசியம் பார்க்கவேண்டிய திரைப்படம் இது.

பிகு :
Aron Ralston எழுதிய   Between a Rock and a Hard Place எனும் சுயசரிதை புத்தகத்தின் அடிப்படையில் இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. பாறையில் சிக்கி வெளிவந்த பிறகு,  மூன்று வருடங்கள் கழித்து காதலியை மணந்து பிள்ளை பெற்றிருக்கிறார் என்பதோடு படம் முடிகிறது. கீழ்காணும் புகைப்படத்தில் இருப்பவர் ரால்ஸன்

Ralston

Trailer

12/01/2011

Volver - விமர்சனம்

by ஆதவா |

volver_p

Directed Pedro Almodóvar
Starring    Penélope Cruz, Carmen Maura, Lola Dueñas, Blanca Portillo, Yohana Cobo, Chus Lampreave
Year 2006
Language    Spanish
Genre Drama, Family

பெண்கள் சந்திக்கும் பாலினம் சார்ந்த அகப்பிரச்சனைகள், நிகழ் வாழ்வில் எழும் சிக்கல்கள், குழந்தைகள் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் விதம், சிதைந்த குடும்பங்களின் வாழ்நிலை போன்றவற்றைப் பற்றி பேசுகிறது வால்வர் (Volver) எனும் ஸ்பானியத் திரைப்படம். நடப்பு வாழ்வில் எழும் சுயபிரச்சனைகளின் ஊடாக கணவனின் இருப்பும், குடும்ப பிளவின் பின்னணியும் பின் சேருதலும் குடும்ப ரகசியங்களின் முக்கியத்துவம் குறித்தும் ஸ்பானிய இயக்குனர் பெட்ரோ அல்மதோவரால் இயக்கப்பட்டது இப்படம். அசாதாரணங்கள் நிறைந்தது ஒவ்வொருவருடைய வாழ்வும். அவை சாதாரணங்களோடே பயணிப்பதை படம் முழுக்கக் காணமுடிகிறது

PenelopeCruz003ராய்முண்டாவாக (Raimunda) நடித்திருக்கும் பெனுலுபி க்ரூஸ் (Penélope Cruz) தாய்மையின் அவஸ்தையையும் போராட்டத்தையும் சிக்கல்களிலிருந்து சுமூகமாக வெளியேறும் வெற்றியையும் மிக அழகான நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார். உலகின் மிக அழகான பெண்களில் ஒருவரான, ஆஸ்கர் விருது வென்ற முதல் ஸ்பானிய பெண்ணான பெனுலுபி க்ரூஸ் இந்த பாத்திரத்திற்கு மிகக் கச்சிதமான பொருத்தமாவார்.

ராய்முண்டா மற்றும் சோலெ (Sole) இருவரும் சகோதரிகள், பெற்றோரை இழந்தவர்கள். தங்களது அம்மாவின் அக்காவாகிய தெய் பவ்லாவிடம் (Tía Paula) வாழ்ந்தவர்கள் ; தெய் பவ்லாவை அருகிலிருந்த அகஸ்டினா (Agustina) எனும் பெண் கவனித்து வருகிறாள். ராய்முண்டாவுக்குத் திருமணம் ஆகி, பவ்லா எனும் மகள் உண்டு. உடல் இச்சை காரணமாக ராய்முண்டாவின் கணவன் பேகோ (Paco) பவ்லாவை கற்பழிக்க முயலுகையில் அசந்தர்ப்பத்தால் கொலைசெய்யப்படுகிறான்.  அதனை மறைக்கும் ராய்முண்டா, பவ்லாவை இக்கட்டான மனச்சூழ்நிலையிலிருந்து வெளியேற்ற முயல்கிறாள். மேலும் தன் தந்தை பேகோ இல்லை என்பதையும் பவுலா தெரிந்து கொள்கிறாள். அருகில் இருக்கும் ரெஸ்டாரெண்ட் தற்காலிகமாகக் கைக்குக் கிடைக்கிறது. அங்குள்ள ஒரு குளிர்ப்பதனப்பெட்டியில் பிணத்தைக் கிடத்துகின்றனர் தாயும் மகளும். இதே சமயத்தில் ராய்முண்டாவின் ஆண்டி (பெரியம்மா) பவ்லா இறந்து போன தகவல் தங்கை சோலே மூலம் தெரியவருகிறது. சோலே மட்டும் சடங்குகளுக்குச் சென்று வீடு திரும்புகையில் எதிர்பாராதவிதமாக இறந்துபோன அவளது அம்மா ஐரின் (Irene) திரும்ப வருகிறாள். முதலில் ஆவி என்று நம்பும் சோலே பின்னர் உண்மையில் அம்மா இறந்து போகவில்லை என்று உணருகிறாள். ஆனால் இந்த விஷயத்தை அக்கா ராய்முண்டாவிடம் சொல்லாமல் மறைக்கிறாள்.

தற்காலிக ரெஸ்டாரண்டை உபயோகப்படுத்தி பணம் பண்ணுகிறாள் ராய்முண்டா.. இச்சூழ்நிலையில் அகஸ்டினாவுக்கு கேன்சர் இருப்பது தெரிய வந்து அவளை மருத்துவமனையில் சந்திக்கிறாள். அப்பொழுது அகஸ்டினா தன் தாய் ராயின் தந்தையோடு தொடர்பு வைத்திருந்ததாகவும் அவளின் மரணம்  பற்றிய ரகசியம் ராய்முண்டாவின் அம்மாவாகிய ஐரினுக்கு  மட்டுமே தெரியும் எனவும், ஆவியாக அலையும் அவளிடம் கேட்டுச் சொல் என்றும் கோரிக்கை வைக்கிறாள். கேன்சரால் பிதற்றுவதாக எண்ணி எரிச்சலைடைந்து அங்கிருந்து அகலும் ராய்முண்டா, சோலே வீட்டில் தன் அம்மா இருப்பதை எப்படியோ தெரிந்து கொள்கிறாள். தன் அம்மாவைக் கண்டதும் கோபத்தில் வெளியேறும் ராய்முண்டா, பிறகு சமாதானமாகி இணைகிறாள்.

அகஸ்டினாவின் அம்மாவுக்கும் ராய்முண்டாவின் அப்பாவுக்கும் இருந்த தொடர்பு என்னாயிற்று, பவுலாவின் தந்தை யார் ? ராய்முண்டாவின் அம்மா எப்படி உயிரோடு திரும்பி வந்தார்? அகஸ்டினாவுக்கு தன் தாய் பற்றிய உண்மை தெரிந்ததா என்பது எதிர்பாராததும் அதிர்ச்சியூட்டக்கூடியதுமான நிகழ்வுகளடங்கிய கிளைமாக்ஸில் காண்க…

Volver  என்றால் திரும்புதல் (to Return) இறந்ததாக எண்ணப்பட்ட தாய் திரும்பி வருதலைக் குறிக்கிறது..  இரு வேறு பாதைகளில் செல்லும் திரைக்கதை மெல்ல மெல்ல ஒவ்வொரு முடிச்சையும் அவிழ்த்து ரகசியங்களை வெளிப்படுத்துகிறது. தாய் –மகள் – தங்கை எனும் பாசங்கள், உறவுகள் மீதான அழுத்தமான நம்பிக்கையையும், அன்பின் ஆழத்தையும் வெளிப்படுத்துகிறது. பேகோவின் காமவெறியாட்டம் உறவின் நம்பிக்கையின்மையையும் மாற்றாந்தகப்பனின் துரோகத்தையும் ஓரளவு சொல்கிறது.

ஒருசில காட்சிகளின் அழுத்தம் குறிப்பிடத்தக்கது. ராய்முண்டா உடலுறவுக்கு ஒப்பாத நிலையில் எப்படியாவது தன் காமத்தைத் தீர்க்க முயலும் பேகோ சுயமைதுனம் செய்துகொள்வது, பேகோவை கொண்டு விட்டு ஒரு தாயிடம் எப்படி பேசவேண்டுமோ அப்படி பேசும் பவுலாவை எதிர்கொள்ளும் ராய்முண்டாவின் காட்சி, தாய் சொல்லிக் கொடுத்த பாடலை ரெஸ்டாரெண்டில் பாடும் ராய்முண்டாவை சந்திக்க முடியாமல் அவளது அம்மா காரில் இருந்தபடியே அழும் காட்சி, என நிறைய உண்டு. (அந்த பாடல் இறுதியில் கொடுக்கப்பட்டிருக்கிறது ; பெனுலுபியின் வாயசைவையும் உணர்ச்சியியலையும் கவனியுங்கள்…)

பெனுலுபிக்கு இணையாக ஐரினாக நடித்திருக்கும் கார்மென் மெளராவின் (Carmen Maura) நடிப்பு அபாரமானது. மகளை சந்திக்கத் தவிர்த்து தவிப்பதும், பின் நெகிழ்வதும், ராய்முண்டாவின் மகள் குறித்த ரகசியத்தை சொல்லவருமிடத்தில் இயல்பாக இருப்பதும், மிகச்சிறப்பான நடிப்பு.

மிகச் சிறப்பான திரைக்கதையும் ஐந்து பெண்களைச் சுற்றி நடக்கும் கதையும் நடிப்பும் படத்திற்கு மிகுந்த பலம். இயக்குனர் பெட்ரோ அல்மதோவரின் All About My Mother, மற்றும் Talk to Her படங்களைக் காட்டிலும் இப்படம் சிறப்பானது இல்லை, எனினும் 2006 கேனஸ் திரைப்படவிழாவில்  Palme d'Or விருதுக்கு போட்டியிட்ட படங்களில் ஒன்றாக இது இருக்கிறது.

2006 கேனஸ் திரைப்படவிழாவில்
சிறந்த நடிகைக்கான விருது பெனுலுபி க்ரூஸுக்கும்
சிறந்த திரைக்கதைக்கான விருது பெட்ரோ அல்மதோவருக்கும் வழங்கப்பட்டது

அகடமி மற்றும் கோல்டன் க்ளோப் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும் எந்த விருதும் இப்படம் பெறவில்லை.

படத்தின் பாத்திரங்கள்:

volver penelope_cruz7 tumblr_ldidcmuCNQ1qb34d0o1_500

சோலே, பவுலா, ராய்முண்டா           ஐரின், ராய்முண்டா                  அகஸ்டினா

Videos :

முன்னோட்டம்

பெனுலுபி க்ரூஸ் பாடிய பாடல்

Ratatouille

DirectionBrad Bird
Starring    Patton Oswalt, Lou Romano, Ian Holm
Music Michael Giacchino
Studio Pixar
Year2007
Language  English
Genre Animation, Comedy
எல்லாருக்கும் திறமை வந்துவிடுவதில்லை ; ஆனால் திறமையானவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம்…. Anton Ego
பிக்ஸரின் படங்களில் நாம் ஏன் மனதைப் பறிகொடுக்கிறோம் எனும் காரணம் மட்டும் தெரிவதேயில்லை. விளிம்பு நிலை பாத்திரங்களை மையப்படுத்தி அதன் கோணத்தை நமக்கு ஆழமாக உணர்த்துவதாலா அல்லது பாத்திரங்களின் வடிவமைப்பிலுள்ள அசாத்தியமான நேர்த்தியாலா அல்லது அனைவரும் விரும்பும் வகையிலான ஆழமான கதை மற்றும் நகைச்சுவையாலா….
ப்ரான்ஸ் நகரில் வாழும் ரெமி, நுகரும் புலனும் ருசியறியும் புலனும் மிகுந்துள்ள ஒரு வித்தியாசமான எலி, அதற்கு பிரபல சமையல்கலை நிபுணரும் பாரிஸின் மிகப்பிரபலமான ரெஸ்டாராண்டாக விளங்கிய குஸ்தாவ் ரெஸ்டாரெண்டின் உரிமையாளருமான மறைந்த அகஸ்டெ குஸ்தாவ் (Auguste Gusteau) எழுதிய “Anyone can Cook” எனும் புத்தகமே புலனூக்கம். தான் ஒரு சமையல் வல்லுனர் ஆகவேண்டும் என்பது அதன் கனவு.
ratatouille_8ஒரு சின்ன நிகழ்வுக்குப் பின் குடும்பத்திலிருந்து பிரிந்த ரெமி, குஸ்தாவ் ரெஸ்டாரெண்டுக்கு தற்செயலாக வந்து சேர்கிறது. அங்கே உள்ள சமையல்காரர்களைப் பார்க்கும் பொழுது அல்ஃப்ரடோ லிங்கினி (Alfredo Linguini) எனும் சுத்தம் செய்யும் பையன், யாருக்கும் தெரியாமல் தவறுதலாக சூப் செய்வதைக் கண்டுபிடிப்பதோடு மட்டுமின்றி ரெமி அந்த தவறை சரிசெய்து அட்டகாசமான சூப் ஒன்றைத் தயாரிக்கிறது. இதனை கண்டுகொண்ட லிங்கினி ரெமியுடன் நட்பு கொண்டு ரெமி சொல்லச் சொல்ல சமையல் தயார் செய்யும் வித்தையைக் கற்று கொள்கிறான். ரெமி, லிங்கினியின் தலைமுடியை கண்ட்ரோலர் போல உபயோகித்து கட்டளைகளை வழங்குகிறது. ஒரு சுத்தம் செய்யும் பையன் மிக நல்ல சமையல் செய்வதைக் கண்டு பொறாமைப்படும் தலைமை சமையல்காரர், லிங்கினிக்கு எலி உதவி செய்வதை மறைந்திருந்து கண்டுபிடிக்கிறார். தவிர, லிங்கினி குஸ்தாவின் மகன் என்ற உண்மையையும் மறைக்கிறார். எப்படியோ இதனைக் கண்டு கொண்ட ரெமி லிங்கினியை குஸ்தாவ் ரெஸ்டாரெண்டின் உரிமையாளராக்குகிறது. தலைமை செஃபை வேலை விட்டு நீக்கிவிடுகிறான்.  லிங்கினிக்கு அங்கே வேலை செய்யும் கொலட் (Colette) என்ற பெண்ணோடு காதலும் ஏற்படுகிறது.
Ratatouille-ratatouilleஆண்டன் ஈகோ (Anton Ego) எனும் பிரபல உணவு விமர்சகர் நீண்ட நாட்களுக்கு முன்னர் குஸ்தாவ் ரெஸ்டாரெண்டைப் பற்றி விமர்சனம் எழுதியதில் ரெஸ்டாரெண்டுக்கு இருந்த ஐந்து நட்சத்திர தகுதி குறைந்திருந்தது. (ரெமியால்) லிங்கினியின் சுவையான சமையலால் மீண்டும் பிரபலமான குஸ்தாவ் ரெஸ்டாரெண்டை விமர்சிக்க அடுத்த நாள் வருவதாக லிங்கினியிடம் சொல்லிவிட்டுச் செல்கிறார் ஈகோ, அதே நேரம் ரெமியை தலைமை செஃப் சிறைபிடிக்க… மறுநாள் ஈகோ வந்த பிறகு அவருக்குப் பரிமாற சுவையான சமையல் செய்யமுடியாமல் திணறும் லிங்கினி உண்மையில் தான் ஒரு சமையல்காரனே இல்லை, எனக்கு ஒரு எலிதான் உதவுகிறது என்று உண்மையைச் சொல்கிறான். அந்நேரத்தில் குடும்பத்தினரால் தப்பித்து மீண்டும் லிங்கினியை ரெமி அடைய, அனைத்து சமையல்காரர்களும் ரெஸ்டாரெண்டை விட்டு வெளியேறிவிடுகிறார்கள். பழைய தலைமை செஃப், ஹெல்த் டிபார்ட்மெண்டுக்கு போனடித்து குஸ்தாவ் ரெஸ்டாரெண்டில் எலிகள் நடமாட்டம் அதிகம் என்று வேறு சொல்லிவிட உணவு சோதனை அதிகாரி எலிகள் இருப்பதைப் பார்த்துவிடுகிறார்.
உணவு விமர்சகர் ஈகோ சாப்பிட அமர்ந்திருக்கிறார், சமையல்கார்களும் சப்ளையர்களும் ரெஸ்டாரெண்டில் இல்லை, பழைய ஐந்து நட்சத்திர அந்தஸ்தை மீண்டும் பெறவேண்டும், உணவு சோதனை அதிகாரியை சமாளிக்கவேண்டும்…. என்ன செய்து ஈகோவை சமாளித்தார்கள், குஸ்தாவ் ரெஸ்டாரெண்ட் இறுதியில் என்னவாயிற்று? ரெமி மற்றும் லிங்கினியின் கதி என்ன என்பதை பரபரப்பான கிளைமாக்ஸில் பார்க்கலாம்.
நகைச்சுவையும் பரபரப்புமாகச் செல்லும் ராட்டடூயில் பிக்ஸரின் அக்மார்க் தரத்தில் வெளிவந்த ஒரு அனிமேஷன் திரைப்படம். ரெமியாக எலியின் நடிப்பு மிகப்பிரமாதமான ஒன்று. ரெமியின் நினைவுகள் குஸ்தாவைப் போல வந்து ஊக்கம் தருவதும் அதற்கு ஏற்ப ரெமியின் எக்ஸ்பிரஷன்ஸ் மிகப்பிரமாதம். சோகம், பாசம், ஏமாற்றம், சந்தோஷம், பெரிமிதம் என ஒவ்வொரு அழகுணர்ச்சிகளையும் மிகப்பிரமாதமாக வெளிப்படும்படி அனிமேட் செய்திருக்கிறார்கள். அசல் எலியின் நடிப்பைக் காட்ட அனிமேட்டர்கள் ஒருவருடங்கள் வரை எலிகளை அவதானித்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியம் தரும் தகவல்
ஒரு இன்னசண்ட் பையனாக அல்ஃப்ரடோ லிங்கினி, எப்போதும் கடுப்பில் இருக்கும் தலைமை செஃப், கோபமும் காதலும் மாறிமாறி வரும் கொலட், ஒரு விமர்சகனின் இறுமாப்பில் ஆண்டன் ஈகோ என அத்தனை பாத்திரங்களின் பங்களிப்பும் படத்தின் சுவாரசியத்திற்கு பக்க பலம்.
ஃப்ரான்ஸின் இரவுநேரக் காட்சிகள், குஸ்தாவ் ரெஸ்டாரெண்டின் சமையல்புறம், ஃப்ரான்ஸ் முகவெட்டு நடிகர்கள் என படத்தின் ஒவ்வொரு துமியும் பார்த்து பார்த்துப் பார்த்து வரைந்தவை. தலைமை செஃப் அதிகாரியிடமிருந்து ரெமிக்கான கடிதங்களைத் தூக்கிச் செல்லும் ரெமியைத் துரத்தும் செஃப் காட்சி மற்றும் ரெமி குடும்பத்திலிருந்து பிரியும் காட்சி ஆகியவை மட்டுமே சமையலறையிலிருந்து காமராவை வெளியே கொண்டு வந்த காட்சிகள். இருப்பினும் ஒரு அனிமேஷன் படம் பார்க்கிறோம் என்ற உணர்வில்லாமல் ஒரு எலியின் கோணத்திலிருந்து பார்க்கவைத்திருப்பது இயக்குனரின் சிறப்பு.
2007 ம் ஆண்டில் சிறந்த அனிமேஷன் பிரிவில் ஆஸ்கர் விருதைப் பெற்றிருக்கிறது என்பது கூடுதல் தகவல்.
படத்தின் பாத்திரங்கள் :
rat
Ratatouille Trailer
பிகு: ராடடூயி என்பது ஃப்ரான்ஸ் நாட்டு சைவ உணவின் பெயராகும். கீழே அதன் படம் கொடுக்கப்பட்டிருக்கிறது; தயாரிக்கும் முறையை “இங்கே” சொடுக்கி தெரிந்து கொள்ளவும்
ratatouille_dish

08/01/2011

3 Iron - விமர்சனம்

by ஆதவா |


Film : 3-Iron
Direction : Kim Ki-duk
Starring Jae Hee, Lee Seung-yeon
Year : 2004
Language : Korean
Genre : Romance, Drama

ஆழ்மெளனத்திலிருந்து கசியும் காட்சிகளைக் கொண்டே 3 iron படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் கிம் கி டுக். இரு கோணங்களுக் கிடைப்பட்ட மெளனத்திலிருந்து மெல்ல துளிர்விடும் காதலை ஆழமாக, வார்த்தைகளற்ற காட்சிகளாக இவரால் சொல்லமுடிகிறது. படம் முழுக்க விவரிக்க இயலாத செயல்களின் தொடர்புகள், இசையற்ற ஊமைக்காட்சிகள் நகர்தலின் ஊடாக மனதைப் பரப்பி தெரிந்து கொள்ளவேண்டிய சுவாரசியங்களென படிப்பதற்கு நிறைய இருக்கின்றன. என்னுடன் இப்படம் பார்த்தவர்கள் ஏன் நாயகனும் நாயகியும் பேசிக் கொள்வதேயில்லை அல்லது அவர்கள் ஊமைகளா என்று கேட்கிறார்கள். உண்மையில் இப்படத்தில் அதிகம் பேசுவது அவர்கள் இருவர் மட்டுமே. பேசுதல் என்பது இலக்கணலட்சண ஒலிகளின் அசைவுகள்  மாத்திரமல்ல; அதோடு அசாதாரணமாகத் தெரியும் சாதாரணர்களையே படம் முழுக்க இயக்குனர் காட்டுகிறார்.

டே-சுக் ஒரு உணவகத்தின் டெலிவரி பாயாக தன்னைக் காட்டிக் கொள்கிறார். நாள்தோறும் உணவு விளம்பரம் அடங்கிய நோட்டீஸ்களை வீட்டின் கதவுகளில் ஒட்டிவிட்டு செல்வதே அவருடைய வேலை. இரவில் எந்த வீட்டின் கதவில் விளம்பர நோட்டீஸ் பிரிக்கப்படாமல் அப்படியே இருக்கிறதோ அந்தவீட்டில் யாரும் இருக்கமாட்டார்கள் என்று உறுதி செய்துகொண்டு அந்த வீட்டில் நுழைகிறார். ஆனால் டே-சுக் ஒரு திருடன் அல்ல. எந்த வீட்டுக்குள் நுழைந்தாலும் அதனை தன் சொந்த வீடாகவே பாவித்து, அந்த வீட்டிலிருக்கும் பொருட்களை பயன்படுத்திக் கொள்கிறார். மேலும் அந்த வீட்டுக்காரர்களின் துவைக்கப்படாத துணிகளை துவைத்தும், வேலை செய்யாத பொருட்களை சரிசெய்தும், மறுநாள் எந்தவித அடையாளமுமின்றி வெளியேறிவிடுவார். கூடவே அந்த வீட்டில் தன்னை ஏதாவது ஒரு இடத்தில் வைத்து புகைப்படமும் எடுத்துக் கொள்வார்.

டே-சுக் ஒரு பணக்கார வீட்டில் முகத்தில் காயத்தோடிருக்கும் பெண்ணால் பார்க்கப்பட்டுவிட, மெளனமாக வெளியேறிவிடுகிறான். இருப்பினும் அந்த பெண்ணுக்கு ஏதோ பிரச்சனை என்றறிந்து மீண்டும் அதே வீட்டிற்குச் சென்று தோழமை ஏற்படுத்த முற்படும் நேரத்தில் அந்த பெண்ணின் கணவனால் எதிர்பாராதவிதமாகப் பார்க்கப்பட்டு கணவனை அடித்துவிட்டு அந்த பெண்ணோடு வெளியேறிவிடுகிறான். கணவனோடு வாழ விருப்பமில்லாதவள், டே-சுக்கின் வித்தியாச வாழ்விற்கு உடன்படுகிறாள். இருவருக்குள்ளும் மெல்ல மெல்ல காதல் சுரக்கிறது. வழக்கம்போல ஒரு வீட்டிற்குள் திருட்டுத்தனமாக நுழையும் இவர்களிருவரும் அந்த வீட்டில் பிணம் இருப்பதை அசெளகரியமாகப் பார்த்துவிடுகிறார்கள். இருவரும் இணைந்து முறைப்படி அந்த பிணத்தை அடக்கம் செய்துவிட்டு அதேவீட்டில் சாப்பிட அமர்கையில் வீட்டு உரிமையாளரால் பிடிக்கப்பட்ட்டு போலீஸில் ஒப்படைக்கப்படுகிறார்கள். போலீஸ் விசாரணையில் மெளனத்தையும் புன்முறுவலையுமே பரிசாகக் கொடுக்கும் டே-சுக், எந்த வீட்டிலும் திருடியவனல்ல என்றறிகின்றனர். அந்த பெண்ணை உரியவரிடம் ஒப்படைக்கின்றனர். ஆனால் அந்த பெண்ணின் கணவனோ தன்னை அடித்தவனைப் பழிவாங்க போலிஸிடம் பணம் கொடுத்து டே-சுக்கை அடித்து காயப்படுத்திவிடுகிறான். அந்த பெண்ணோ, கணவனிடம் வாழ விருப்பமின்றி டே-சுக்கின் வருகைக்குக் காத்துக் கிடக்கிறாள்.

டே-சுக் இப்பொழுது சிறையில் வித்தியாசமான வாழ்வை வாழ்வதற்கு முற்படுகிறான், ஒருவருக்குத் தெரியாமல் அவர் பின்னேயே மறைந்து வாழும் உத்தியைத் தெரிந்து கொள்ள முற்படுகிறான். தன்னை தினமும் கவனிக்கவரும் போலிஸிடம் அதை செயல்படுத்தி வெற்றியும் காண்கிறான். டே-சுக்கின் கதி என்னாயிற்று அந்த பெண்ணோடு இணைந்தானா, கணவனது நிலையென்ன போன்றவை படத்தின் முடிவு.

படம் முழுக்க சிறு சிறு சம்பவங்களின் பெரிய காட்சியமைப்பு அல்லது விவரிப்பு கவனிக்கத்தக்கது. படத்தின் பெயர் போடப்படும் விதமே மிக அழகான விவரணை நிறைந்த காட்சி... மாடலாக இருக்கும் அந்த பெண்ணின் புகைப்படத்தை அவள் கிழித்து அங்கொன்றும் இங்கொன்றுமாய் இணைக்கும் அந்த காட்சியே சட்டென நிமிரவைக்கும் காட்சி. தனது நிலையை மிக ஆழமாக, வார்த்தைகளின்றி அந்த செய்கையின் மூலம் அவள் தெரியப்படுத்துகிறாள். பின்னர் அதே புகைப்படம் ஓரளவு சரிசெய்யப்பட்டிருப்பதைக் காண்பிக்கும் பொழுது, அந்த பெண்ணின் நிலை ஓரளவு சரியாகிவிட்டது என்பதை உணர்த்துவதாக இருக்கும், முடிவில் அந்த புகைப்படம் டே-சுக்கால் மாயமாக களவாடப்படும்பொழுது அந்த பெண் டே-சுக்கின் மாயத்திற்கு உரியவள் என்பதை இயக்குனர் சொல்லிவிடுகிறார். அதேபோல கோல்ப் பந்தைக் கட்டி டே-சுக் அடிக்கும் காட்சி அவனது வன்முறையின் வடிகாலாக இருக்கிறது. அதனைத் தடுக்கும் பொருட்டு அவள் போய் நிற்பதும், பாராமல் கோல்ப் பந்தினால் ஒரு பெண்ணைக் காயப்படுத்துவதும் அவனது மனநிலையை எடுத்துக் காட்டும் மிகச்சிறந்த காட்சி. அங்கிருந்தே அவளுக்கும் டே-சுக்கிற்கும் காதல் பிறந்துவிடுகிறது.

படம் மூன்று தளங்களில் டே-சுக்கை வைத்து நகர்கிறது. முதலாவது டே-சுக் தனது அன்றாட வாழ்வை இக்கட்டுகளின்றி தொடருவது, இரண்டாவது டே-சுக்கிற்கும் அந்த பெண்ணுக்கும் உண்டான காதல் ; மூன்றாவது தன்னை அந்த காதலுக்காக மறைக்க அவன் தேர்ந்தெடுக்கும் உத்தி. அதேபோல, மூன்று பேரை மையமாகக் கொண்டு நகரும் இக்கதையில் மூன்று கோணங்கள் அல்லது முக்குறியீடுகள் படங்களில் ஆங்காங்கே காணப்படுகின்றன. டே-சுக் மூன்று வீடுகளில் பிரச்சனையால் மாட்டிக் கொள்வார், டே-சுக்கைப் பழிவாங்கவரும் பெண்ணின் கணவன் மூன்று கோல்ப் பந்துகளை எடுத்துவருவார். இவைகள் தற்செயலானதா அல்லது காரணங்களுண்டா எனத் தெரியவில்லை..
தன்னை மறைத்துக் கொள்ளும் டே-சுக், தானும் தன் காதலியும் இருந்த வீட்டிற்கெல்லாம் சென்று தடயத்தை ஏற்படுத்துவது சுவாரசியமான ஒன்று. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணங்களைச் சுட்டுகின்றன. குறிப்பாக, குத்துச்சண்டைவீரன் போஸ்டரில் கண்களை மறைப்பது, தான் மறைந்திருக்கிறோம் என்பதாகவும், தங்களது காதல் கண்களுக்குப் புலப்படாதது என்பதாகவும், கண்மூடித் தனமானது உங்கள் வாழ்க்கை என்று சுட்டிக் காட்டுவதாகவும் (அந்த நேரத்தில் வரும் வசனங்களை வைத்து) இருக்கும். உண்மையில் படத்தில் காதல் பற்றிதான் பேசப்படுகிறதேயொழிய காதலர்கள் பற்றி பேசப்படுவதில்லை.

பெரும்பாலும் மெளனமே இசைப்பதால் ஒலிக்கருவிகள் மெளனமாகக் கிடக்கின்றன. ஒளிப்பதிவுவும் காட்சிக் கோணங்களும் பல கவிதைகளின் சங்கமம். ஒவ்வொரு இடத்திலும் கேமராவை சாதாரணமாக, வித்தியாசமாக, அசாதாரணமாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.

ஒரு சிறந்த காதல்கதை... வித்தியாசமான தளத்தில்......

07/01/2011

Bicentennial Man - விமர்சனம்

by ஆதவா |


Film : Bicentennial Man
Direction : Chris Columbus
Starring : Robin Williams
Year : 1999
Language : English
Genre : Drama, Sci-fi

எந்திரங்கள் ஆட்சி செய்யப்போகும் நாளைய உலகில் எந்திரன்களின் அன்புக்கும் காதலுக்கும் உறுதுணையாக இருப்பது எது? மனிதனா? அல்லது எந்திரன்களா?

இந்த கேள்வியைத் தாங்கித்தான் பைசெண்டனியல் மேன் படம் முழுக்கக் கதை செல்கிறது. இன்றைய உலகமே அன்பு எனும் மாயவலைக்குள்தான் சுற்றிக் கொண்டிருக்கிறது. ஒரு நாய்க்குட்டி கூட தன் ரோமங்களை பாசத்தோடு தடவிவிடுவதற்கு விரல்களுக்கு ஏங்கும் பொழுது மனிதன் அன்பினால் கட்டுண்டிருப்பது ஒன்றும் ஆச்சரியமான விஷயமல்ல. நமது வாழ்வை மெல்ல மெல்ல உலோக மனிதர்களுக்குப் பரிகொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் அவர்களுக்கும் காதல், பாசம், நகைச்சுவை, கோபம், போன்ற உணர்வுகள் இருந்தால் எப்படியிருக்கும்?? அறிவியல் புனை எழுத்தாளர் ஐசக் அசிமோவின் கதையில் 1999 ம் வருடம் வெளியான பைசெண்டனியல் மேன் திரைப்படம் உணர்ச்சி மிகுந்த, மனிதம் விரும்பும் ஒரு இயந்திரத்தின் இரண்டு நூற்றாண்டுக் கதையாகும்.

வீட்டு உபயோகங்களுக்காக ஆண்ட்ரூ எனும் மனித ரோபோவை வாங்கி வருகிறார் மார்ட்டின். வழக்கம்போல அதன் புத்திச்சாலித்தனமான பேச்சும் இயந்திரத்தனமான நடத்தையும் பிடிக்காத மார்டினின் குழந்தைகள் அதனை வெறுக்கிறார்கள். மார்டினின் இரண்டாவது குழந்தையான லிட்டில் மிஸ்ஸுக்குப் பிடித்தமான குதிரை பொம்மையை எதிர்பாராத விதமாக உடைத்துவிடும் ஆண்ட்ரூ, லிட்டில் மிஸ்ஸுக்காக அதே போல வேறொரு குதிரை பொம்மையை செதுக்கித் தருவதிலிருந்து அதற்கு கற்பனைத் திறனும் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் அறிவும் இருப்பதை மார்டின் உணர்கிறார். மார்ட்டின் ஆண்ட்ரூவுக்கு உணர்ச்சிகளை உள்வாங்குவது குறித்தும், மனிதவளம் குறித்தும் பலவகையில் சொல்லித் தருகிறார். ஆண்ட்ரூவை ஒரு ரோபோவாகப் பார்க்காமல் தனக்குக் கீழ் வேலை செய்யும் ஒரு மனிதனாகவே பார்க்கிறார். ஆண்ட்ரூ தனது கற்பனையின் மூலம் பலவகையான விதவிதமான பொருட்களைச் செதுக்குகிறது. தனக்கென ஒரு வங்கி கணக்கும் ஏற்படுத்திக் கொண்டு பணமும் சம்பாதிக்கிறது. அதனைக் கொண்டு தனது உணர்ச்சியை முகத்தில் காட்டும்படி ஒரு சில அப்க்ரேடும் செய்துகொள்கிறது.

நாட்கள் கடக்கின்றன. லிட்டில் மிஸ்ஸுக்குக் கல்யாணம் நடந்துவிடுகிறது. ஆண்ட்ரூ தனக்கென ஒரு வாழ்க்கை வாழவேண்டுமென விரும்பி மார்ட்டினிடம் சுதந்திரம் கேட்டுப் பெற்றுக் கொள்கிறது. வருடங்கள் கடந்தநிலையில் மார்ட்டின் இறந்துவிடுகிறார். ஆண்ட்ரூ தனது அடுத்த பயணத்தைத் தொடருகிறது. தன்னைப் போலவே திறமையுள்ள ரோபோக்களைத் தேடி வருடம் முழுக்க அலைகிறது. முடிவில் கலடீ (Galatea) எனும் ஆடிப்பாடும் ஒரு பெண் ரோபோவைக் கண்டுபிடித்து அதன் உரிமையாளரும் ஆராய்ச்சியாளரும் ஆண்ட்ரூவை வடிவமைத்த ஆராய்ச்சியாளரின் மகனுமான ரூபர்ட் என்பவரை அடைகிறது. ஆண்ட்ரூ இப்பொழுது தன்னை முழுமையாக மனிதனாக்க விரும்புகிறது. தனது பழைய உலோகத் தோலை உரித்துக் கொண்டு புதிதாக மனிதத் தோல் போர்த்தி உருவெடுக்கிறது. இதற்கான ஆராய்ச்சி செலவு அனைத்தையும் தானே ஏற்றுக் கொள்வதாகவும் ஆண்ட்ரூ கூறிவிட, ரூபர்ட் இன்னும் பல முயற்சிகளை மேற்கொள்கிறார். வெற்றிகரமாக லிட்டில் மிஸ்ஸைக் காணத் திரும்பும் ஆண்ட்ரூவுக்கு ஆச்சரியம், லிட்டில் மிஸ் மிக இளமையாக இருக்கிறாள். ஆனால் அது உண்மையில் லிட்டில் மிஸ்ஸின் பேத்தி போர்சியா என்பதை பின்னர் அறிகிறார். தான் கிட்டத்தட்ட மனிதன் ஆகிவிட்டோம் என்பதோடு தனக்கு ஒரு துணைவேண்டும் என்று போர்சியாவைக் காதலிக்கவும் செய்கிறது ஆண்ட்ரூ. லிட்டில் மிஸ்ஸின் இறப்புக்குப் பிறகு ரூபர்ட்டின் ஆராய்வில் மேலும் சில அப்க்ரேடுகளோடு முழுக்க மனிதனாகவே மாறிவிட்ட ஆண்ட்ரூ தான் ஒரு மனிதன் என்று உலகிற்கு அறிவிக்கவேண்டியும், போர்சியாவை முறைப்பட திருமணம் செய்து கொள்ளவும் உலக காங்கிரஸுக்கு மனு கொடுக்கிறது. ஆனால் அந்த விசாரணை ரத்து ஆவதோடு மட்டுமின்றி ஆண்ட்ரூ ஒரு ரோபோ மட்டுமே என்று தீர்ப்பும் வந்துவிடுகிறது.

நாட்கள் கடந்துசெல்ல, ரூபர்ட் ஆண்ட்ரூவுக்கு இரத்த முறையை அறிமுகப்படுத்தி ஆண்ட்ரூவை 99 சதவிகிதம் மனிதனாக்குகிறார். ஆனால் இந்த சோதனைக்குப் பிறகு ஆண்ட்ரூ மனிதர்களைப் போலவே வயதாகி இறக்கவும் நேரிடும் என்று எச்சரிக்கிறார். போர்சியாவுக்காக முழு மனிதனாக மாறிக்கொள்ளும் ஆண்ட்ரூ தனது அந்திமக் காலத்தில் மீண்டும் ஒரு மனு ஒன்றை உலக காங்கிரஸுக்கு வைக்க, அதனைப் பரிசீலித்து முடிவெடுப்பதாக நீதிபதிகள் கூறுகின்றனர். அதன் பிறகு ஆண்ட்ரூ மனிதனாக அங்கீகரிக்கப்பட்டாரா? போர்சியாவுடன் உயிரோடு இருந்தாரா என்பதெல்லாம் கிளைமாக்ஸ்.

அதிரடியான சண்டைகள், பிரம்மாண்டமான காட்சிகள், போன்ற எந்த ஆர்ப்பாட்டமுமில்லாமல் அமைதியாகத் தொடங்கி அமைதியாக முடிகிறது இத்திரைப்படம். ஒருவேளை அதுவே இப்படத்திற்குத் தோல்வியாக இருந்திருக்கலாம். வீட்டுக்காட்சிகளே மிகப்பிரதானமாக இருக்கையில் ஒரு சில இடங்களில் நமக்கும் நெளிவு வந்துவிடுவதற்குக் காரணம் இது ஒரு ரோபோ பற்றிய படம் என்று மனது அடிக்கடி நினைவூட்டுவதுதான். ஆண்ட்ரூவாக நடித்திருக்கும் ராபின் வில்லியம்ஸுக்குப் பேர் சொல்லும் வகையில் பல காட்சிகள் உண்டு. தமிழ் “எந்திரன்” போல முப்பது நாளிலேயே உணர்ச்சியைப் புகட்டிவிடும்படியான காட்சிகள் எதுவுமில்லாமல் இயல்பாகவே அந்த ரோபோவுக்கு உணர்ச்சியிருப்பதாகக் கூறியிருப்பது ஒரு க்ரேட் எஸ்கேப் என்றே சொல்லலாம். மேலும் ஒரு இயந்திரம் முதலில் தனக்குள் உண்டாக்கப்பட்டிருக்கும் ஸ்க்ரிப்டுகளுக்குள்தான் முதலில் உள்வாங்கும் என்பதற்கு ஆண்ட்ரூ, நகைச்சுவை பயிலும் காட்சிகளைச் சொல்லலாம். என்னதான் ரோபோ என்றாலும் அதனை முழு மனிதனாக்குகிறேன் பேர்வழி என்று அதற்கு நரம்பிலிருந்து இரத்தம் வரை இயக்ககம் கொண்டுவருவது எல்லாம் நம்பும்படியாக இல்லை. ஆனால் நாளை என்னவேண்டுமானாலும் நடக்கலாம்..

சிறந்த மேக்கப்புக்காக பரிந்துறைக்கப்பட்ட இப்படத்தின் உலோக மனிதன் அலங்காரம் ஒரு இயந்திரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தது ஆச்சரியமான விஷயம். வெளியுலகம் எப்படியிருக்கும் என்று அவ்வளவாகக் காண்பிக்காத உத்தி சிறந்ததுதான் என்றாலும் வீட்டிற்குள்ளேயே படமெடுக்கப்பட்டிருப்பதால் ஏதோ ஆங்கிலத்தில் விசு படம் பார்த்தமாதிரி இருக்கிறது. ட்ராமா என்பதால் மனதைத் தொடும் காட்சிகள் ஒரு சில உண்டு என்றாலும் ஆகச்சிறந்த காட்சிகள் என்று எதுவுமேயில்லை. ராபின் வில்லியம்ஸ் கண்ணீர்கூட விடமுடியாத இயந்திரமாகவே நின்றுகொண்டிருப்பதால் உண்மையில் இயந்திரம் சோகத்தில் இருக்கிறதா, சிரிக்கிறதா என்றெல்லாம் உணர்ந்து கொள்ள முடிவதில்லை. அப்படி உணர்ந்து கொண்டிருந்தாலும் சறுக்கலாகவே இருந்திருக்கும்.


இந்த திரைப்படத்திலிருந்து “எந்திரன்” திரைப்படம் உருவானதாகக் கூறியவர்கள் முதலில் இரண்டு படங்களையும் நன்கு பார்க்கவேண்டும். இரண்டுக்கும் கதையே சற்று வித்தியாசமானது; உணர்வு வந்த ஒரு ரோபோ காதலில் விழுவது குறித்தது பைசண்டனியல் மேன் திரைப்படம் ; உணர்வு புகுத்தப்பட்ட ரோபோ, காதலில் விழுவதால் ஏற்படும் விளைவுகள் பற்றியது எந்திரன். ஆக இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. மேலும் பைசண்டனியல் மேன் திரைப்படத்தின் எந்தவொரு காட்சிகளும் எந்திரன் திரைப்படத்தில் காப்பியடிக்கப்படவில்லை. ( i,robot படத்திலிருந்து ஒரேயொரு காட்சி மட்டுமே எந்திரன்களிலிருந்து மனிதனைக் கண்டுபிடிக்குமிடத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும். ) ரோபோ என்ற பெயரில் இந்த திரைப்படம் பைசண்டனியல் மேனுக்கு முன்பே உருவாகவேண்டியது, ஆனால் பட்ஜெட் பிரச்சனைகளினால் நடவாமல் போனது குறித்து பலருக்கும் நினைவிருக்கும்... என்னைப் பொறுத்தவரையிலும் பைசண்டனியல் மேன் மற்றும் ஐ,ரோபோட் ஆகிய இருபடங்களிலிருந்தும் காப்பியடிக்கப்படாத திரைப்படமே சூப்பர்ஸ்டார் நடித்த எந்திரன். மற்றபடி எந்திரன் ஒரு பிரம்மாண்ட மசாலா என்பதை மறுக்கமாட்டேன்!!

பதிவு பிடித்திருந்தால் இண்ட்லியில் வாக்களியுங்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Subscribe